மேலப்பாளையத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

இதில் மேலாண்மைக் குழுத் தலைவர்  ஷம்சுல்லுஹா அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள்.