மேலப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம்!

malapalayam_eye_camp_3malapalayam_eye_camp_2malapalayam_eye_camp_106.01.2008 ஞாயிற்றுக் கிழமையன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. திருநெல்வேரி மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் திருநெல்வேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி முகாமைத் தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் எம்.எஸ். சுலைமான் முன்னிலை வகித்தார். மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டிச் செயலாளர் அஸதுல்லாஹ், பொருளாளர் ஸய்யது இப்ராஹீம், துணைத் தலைவர் மஸ்ஊத் யூசுபி, துணைச் செயலாளர் முஹம்மது அலீ ரஹ்மானி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளைத் தலைவர் எஸ்.பி. மைதீன், செயலாளர் ஞானியார், ரோஷன், செய்யதரி, கிரஸண்ட் மருத்துவனை நிர்வாகிகள் அப்துல் மஜீத், காடை பஷீர், பாசுதீன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த இலவச கண் சிகிச்சை முகாமில், திருநெல்வேரி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் ஜடின் கோரிஹ், டாக்டர் சந்தியா ரெட்டி மற்றும் குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சையள்pத்தனர்.

கண்புரை, குழந்தைகSக்கான கண் நோய்கள், சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள், தூரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளிட்ட அனைத்து கண் நோய்களுக்கும் இந்த முகாமில் சிகிச்சையள்pக்கப்பட்டது. சுமார் 400க்கும் அதிகமானோர் இந்த முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 50 பேர் கண்புரை நோயளிகள் என கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அவர்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நோயாளுக்கு அறுவை சிகிச்சை, உள்விழி லென்ஸ், போக்குவரத்து, மருத்துவச் செலவுகள், உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

மேலப்பாளையம், குறிச்சி, முன்னீர் பள்ளம், தருவை, குலவணிகர்புரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து சமூகத்தினரும் இந்த கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அரவிந்த் கண் மருத்துவனையில் முகாம் அதிகாரி டி. சுப்ரமணியன் மேற்பார்வையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலப்பாளையம் கிளை இந்த முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

போலியோ தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமும் மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் வளாகத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.