மேலப்பாளையத்தில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம் மற்றும் சைக்கிள் பேரணி

பாபரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல் சாத்திரங்களின் அடிப்படையில் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்தும், உச்சநீதிமன்றம் இவ்வழக்கைத் தானாக முன்வந்து விசாரிக்கக் கோரியும் வரும் ஜனவரி 27 அன்று சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களின் முன்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 22.01.2011 அன்று சைக்கிள் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் மேலப்பாளையம் சந்தை பேருந்து நிறுத்தத்தில் சைக்கிள் பேரணி துவங்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா தலைமை தாங்கினார்கள்.

நிறைவில் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் கே. அப்துந்நாஸிர் சிறப்புரையாற்றினார்.

இரவு 8 மணியளவில் மேலப்பாளையம் பஜார் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலீ தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி, பாபரி மஸ்ஜித் தீர்ப்பின் அம்சங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ஆர். ரஹ்மத்துல்லாஹ், மதுரையில் நடைபெறவுள்ள பேரணி ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.