மேலப்பாளையத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மே 1 முதல் 25 தேதி வரையிலும் மற்றும் மே 1  முதல் 10 வரையிலும் மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் சிறுவர், சிறுமியருக்கான கோடை காலப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது.

இதில் சுமார் 325க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு ஒழுக்கப் பயிற்சியளிக்கப்படுகின்றது.

மேலாண்மைக்குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் எஸ்.ஒய். மஸ்ஊத் யூசுபி, மாவட்டப் பேச்சாளர் பி.எம். முஹம்மது ஹஸன், முஹம்மது ஆதம், ஆலிமாக்கள் வி.எஸ். முஹைதீன் பாத்திமா, வி.எஸ். மிஹ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு வகுப்புகள் நடத்தினர். இதில் அரபு மொழிப் பயிற்சி, துஆக்கள் மனனம், இஸ்லாமியக் கொள்கை விளக்கம் போன்ற பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன.