மேலப்பாளையத்தில் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

பிரபல குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் குமரகுரு எம்.டி., டி.சி.ஹெச் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தார்.

இதில் பல்வேறு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.