மேலக்காவேரியி்ல் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 14.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜாமியா நகர், மெயின் ரோட்டில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் இயக்கமும், நோக்கமும் என்ற தலைப்பிலும், சகோ: குலாம் அவர்கள் (மாவட்ட பேச்சாளர்) மௌலூதை எதிர்ப்பதேன்? என்ற தலைப்பிலும், சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் நபித் தோழியர்களின் படிப்பினை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் M.அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட து. செயலாளர் M. சாகுல் அவர்கள் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன், மாவட்ட செயலாளர் H.சர்புதீன், கிளை து. தலைவர் P.சிராஜுதீன், கிளை செயலாளர் R.இமாம் அலி, கிளை து.செயலாளர் M.அய்யூப், கிளை மாணவரணி செயலாளர் H.அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் A.ஆசாத் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.