மேலக்காவேரியில் நடைபெற்ற தஞ்சை வடக்கு பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரியில் கடந்த 22.05.10 சனிக்கிழமை அன்று ஜூலை 4 செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மாவட்ட பொதுக்குழு நடைப்பெற்றது.

இதில்  மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மேலும் மேலான்மைகுழு உறுப்பினர் P.ஜெயினுல்ஆபிதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்திய சுதந்திரத்திற்க்காக பல தியாகங்களை செய்த முஸ்லிம்களுக்கு ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு 10% சதவிகித இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்ஷா அல்லாஹ் ஜூலை 4 அன்று 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி & மாநாட்டில், திரளான மக்கள் கலந்துகொள்வது.

இம்மாநாட்டிற்கு தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அதிக விளம்பரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பைக் பேரணிநடத்துவதென ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.