மேலக்காவேரியில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 28.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடை பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சகோதரி:ரித்வானா அவர்கள் (இரண்டாம் ஆண்டு மாணவி) தலைமை தாங்கினார். சகோதரி:சாரா ஆலிமா அவர்கள் நபி தோழியர்களிடம் பெறும் படிப்பினை என்ற தலைப்பிலும், மூன்றாம் ஆண்டு மாணவி சகோதரி:ரித்வானா அவர்கள் பயனளிக்காத உறவுகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஜெசீமா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.