மேலக்காவேரயில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 28.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று செட்டி சந்து சாதிக் பாட்சா இல்லத்தில் பெண்கள் பயான் நடை பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: S.சாரா ஆலிமா அவர்கள் அல்லாஹ்வின் மன்னிப்பு வேண்டுமா என்ற தலைப்பிலும் சகோதரி: A.நவ்சாத் பேகம் ஆசரியை அவர்கள் அழிக்கப்பட்ட சமுதாயம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி M.கதீஜா அவர்கள் தலைமை தாங்கினார், கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ், கிளை செயலாளர் இமாம் அலி, கிளை து. செயலாளர் அய்யூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி A.ஜாஸ்மின் நிசா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.