மேட்டுப்பாளையம் நகர கிளையில் ரூபாய் 51 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

200920091388கோவை மாவட்டம் TNTJ மேட்டுப்பாளையம் நகர கிளை சார்பாக ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் மிக சிறப்பாக வழங்கப்பட்டது. மேட்டுபாளையம் நகர கிளை சார்பாக Rs :51000மதிப்புள்ள பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

இதன் மூலம் 175 குடும்பங்கள்பயனடைந்தது. பெருநாள் தினத்தன்று மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய Rs௦:350 மதிப்புள்ள பார்சல்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் TNTJ  சார்பாக வருடந்தோறும் பயன் அடையும் மக்களுக்கு நமது கொள்கை-கோட்பாடுகள் சரியாக சென்றடைவதில்லை. இதனை மனதில் கொண்டு இந்த ஆண்டு ஃபித்ரா விநியோகத்தின் போது சிறப்பு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் TNTJ மேட்டுப்பாளையம் கிளை தலைவர் சகோதரர் P. முஹம்மத் இப்ராஹிம் அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.