மேட்டுப்பாளையம் நகரத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

21092009139121092009233கோவை மாவட்டம் TNTJ மேட்டுப்பாளையம் நகர கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை மேட்டுப்பாளையம் மதீனா நகரில் அமைந்துள்ள நேரு ஜி பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 7 ஆண்டுகளாக இதே பள்ளியில் இரு பெருநாள் தொழுகையும் நடந்துவரும் நிலையில் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமான அளவில் மக்கள் கலந்துகொண்டனர். ஆரம்ப காலங்களில் சுமார் 20 – 30௦ மக்களே கலந்துகொண்ட நிலை மாறி இந்த ஆண்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுமார் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 600 பேர் கலந்துகொண்டனர். ஏகத்துவ கொள்கையை நசுக்க துடிக்கும் சக்திகளின் சூழ்ச்சியை முறிஅடித்து மக்கள் வெள்ளம் பெருகுவது தவ்ஹீத் வாதிகளிடையே புது  புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழுகை சுமார் 8.30௦ மணிக்கு ஆரம்பமானது.இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் கிளை தலைவர் சகோதரர்: P.முஹம்மத் இப்ராஹிம்அவர்கள் “ரமலான் போதித்த இறையச்சம்” என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரை ஆற்றினார். அவர் தமது உரையில் கடந்து சென்ற ரமலான் நம் இடத்தில் ஏற்படுத்தியுள்ள வியக்கத்தக்க மாற்றத்தை மிக எளிமையாக எடுத்துரைத்தார்.