மேட்டுப்பாளையம் கிழக்குத்தெரு கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

002 (1)004மேட்டுப்பாளையம் TNTJ கிழக்குத்தெரு கிளையின் சார்பாக வாராவாரம் பல்வேறு தாஃவா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக தெருமுனை பிரச்சாரங்களும், பெண்கள் பயான்களும் அதிக அளவில் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 10-12-2010௦ அன்று பெரிய பள்ளிவாசல் பின்புறம் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் TNTJ கிழக்குத்தெரு கிளையின் தலைவர் சகோதரர்: P. முஹம்மத் இப்ராஹீம் அவர்கள் “பிரார்த்தனை” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

தமது உரையில் பிரார்த்தனையின் முக்கியதுவதுவத்தைப் பற்றியும், ஒழுக்கங்களைப் பற்றியும், ஏக இறைவன் இடத்தில பிரார்த்தனை நிறைவேற விரும்புவோர் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும் அழகாக எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து சகோதரி H. தஸ்லிம் பர்வீன் அவர்கள் “ஏகத்துவத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அவரது உரையில் ஏகத்துவத்தின் முக்கியவத்துவத்தை பற்றியும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்களை பற்றியும், நாம் செய்யும் அமல்கள் அனைத்தும் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப் படவேண்டும் என்றால் நம் உயிர் மூச்சு உள்ள வரை கடைபிடிக்க வேண்டிய கொள்கை ஏகத்துவம் தான் என்று சிறப்பாக எடுத்துரைத்தார்.

இது போல் தொடர் நிகழ்ச்சியின் மூலம் மேட்டுப்பாளையத்தின் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெண்கள் மத்தியிலும் பெரும் அளவில் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.