மேட்டுப்பாளையம் காட்டூர் கிளையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

DSC00423DSC00420கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக ஏராளமான தாஃவா நிகழ்ச்சியுடன் சேர்த்து பல்வேறு சமுதாய பணிகளும் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 10-01-2010 அன்று TNTJ காட்டூர் பகுதியில் அமைந்துள்ள நூலகத்தில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு TNTJ காட்டூர் கிளை துணை தலைவர் சகோதரர்: முஹம்மத் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் DR. ஷாஜஹான் அவர்கள் தோடு வருமாம் மூலம் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

இரத்த அழுத்தம், சர்க்கரை, இருதய நோய் போன்ற ஏராளமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 40க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாம் மூலம் பயன் பெற்ற சகோதர சகோதரிகள் மன நிறைவுடன் திரும்பி சென்றனர்-

அல்ஹம்துலில்லாஹ்!. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை TNTJ காட்டூர் கிளை சகோதரர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.