மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்

New Image4New ImageNew Image1New Image3தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக தமிழக மெங்கும் கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பட்டமும் பேரணிகளும் நடத்தப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் TNTJ கிளையின் சார்பாக டிசம்பர் 6ம் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 4.00 மணி அளவில் ஆரம்பித்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் இந்த ஆண்டு லிபர்ஹான் கமிஷன் அறிக்கை வெளிவந்த நிலையில் மக்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தின் இறுதியில் TNTJ மாநில செயலாளர் மௌலவி: கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆக்ரோஷமான கண்டன உரை நிகழ்த்தினார்.

அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பள்ளிவாசல் இருந்த இடத்தில மீண்டும் பள்ளி கட்டப்படவேண்டும் என்றும் மேலும் லிபர்ஹான் கமிஷன் அறிக்கையில் அடையாளம் காண்பிக்கப்பட்ட அணைத்து கயவர்களும் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் குரல் எழுப்பினார்.

வருடா வருடம் ஹிந்து முன்னணி அமைப்பினர் 100 பேர் ஆர்பாட்டம் நடத்துவார்கள். அதன் பின்னர் TNTJ அதே இடத்தில சுமார் 100 பேர் கொண்டு ஆர்பாட்டம் நடத்தும்.

இதை மாற்றும் வண்ணமாக, சுமார் 2 வார காலமாக மேட்டுப்பாளையம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள நடத்தப்பட்டது. குறிப்பாக TNTJ மேட்டுப்பாளையம் கிளையை சேர்ந்த பெண்கள் வீடு வீடாக சென்று பிரசுரங்களை விநியோகித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதன் விளைவாக இந்த ஆண்டு ஹிந்து முன்னணியினர் வெறும் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டு காலை 11 மணி அளவில் ஆர்பாட்டம் நடத்தினர்.

மாலை 4.00 மணி அளவில் TNTJ நடத்திய ஆர்பாட்டத்தில் சுமார் 300 பெண்கள் உட்பட 700 க்கும் மேர்பட்டோர் கலந்து கொண்டனர்- அல்ஹம்துலில்லாஹ்.

முஸ்லிம்களின் எழுச்சியை கண்ட சங்க பரிவார் கும்பல் வாய் அடைந்து போனது!

இந்த செய்தி பத்திரி்க்கைகளில் வெளியானது:

தினமணி