மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற காட்டூர் மருத்துவமனை நோயாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி

dsc-02dsc-01கோவை மாவட்டம் மேட்டுபாளயத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11.10.2009 (ஞாயற்று கிழமை) அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 100 நோயாளிகளுக்குரொட்டி/பழங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு TNTJ காட்டூர் கிளை தலைவர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த சந்திப்பின் போது அணைத்து நோயாளிகளுக்கும் தூய இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாம் கூறும் மனித நேயம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

நீண்ட நாளாக நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு, இது மிக ஆறுதலாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் அமைந்தது. மேலும் இஸ்லாமியர்களை பற்றியுள்ள தவறான சிந்தனையும் அகற்றப்பட்டது- அல்ஹம்துலில்லாஹ்! இந்த சந்திப்பு மருத்துவமனை பணியாளர்கள் இடையேயும் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியை காட்டூர் கிளை நிர்வாகிகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.