மேட்டுபாளயத்தில் நடைபெற்ற தியாகத்திருநாள் திடல் தொழுகை

28112009021281120091439ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக தமிழகம் எங்கும் நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டு பெண்களும் பெருநாள் தினத்தை மகிழ்வாக கொண்டாடும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரத்தில் TNTJ சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கம் போல் மதீனா நகரில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நேரு ஜி பள்ளி வளாகத்தில் நடந்த தொழுகை செரியாக 8.00 மணிக்கு ஆரம்பமானது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் தென்பட்டது குறிப்பிடதக்கதுஅல்ஹம்துலில்லாஹ்.

இதில் TNTJ மாநில பேச்சாளர் மௌலவி: முஹம்மது இஸ்மாயில் உமரி அவர்கள் ஹஜ் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

அவர் தமது உரையில் மனித குலத்தின் இமாம் இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்க்கையையும் நமது வாழ்கை நிலையையும் ஒப்பிட்டு நாம் எங்கேல்லாம் பின் தனயுள்ளோம் என்பதை சுட்டி காண்பித்தார். மேலும் அந்த தியாக வரலாறின் மூலம் ஏக இறைவன் இப்ராஹீம்(அலை) அவர்களையும் அவரது சமுதாய மக்களையும் எவ்வாறு சிலாகித்து கூறிகிறான் என்பதையும், அவர்களுக்கு வழங்க பட்ட அந்தஸ்தையும் மிக எழுமையாக எடுத்துரைத்தார்.

அதே போல் இப்ராஹீம்(அலை) அவர்கள் சொன்ன கொள்கையும் இன்று நாம் கடை பிடிக்கும் கொள்கையும் ஏகத்துவம் தான் என்பதையும், அவர் இந்த ஏகத்துவ பிரசாரத்தை தனி மனிதனாக இருந்தும் எவ்வளவு வீரியமாக செயல் பட்டார் என்பதையும் மிக அழகாக எடுத்துரைத்தார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இதில் சுமார் 600 ஆண்களும், 200 பெண்களும் கலந்துகொண்டனர்.