முஹம்மது அக்லாக் படு கொலையை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கொல்லப்பட்டதற்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

முஹம்மது அக்லாக் படு கொலையை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கொல்லப்பட்டதற்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

2014ல் பிஜேபி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றதற்கு பின்னால் வட இந்தியாவில் குறிப்பாக பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் பசுவின் பெயரால் பசுக்குண்டர்களால் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படுவது தொடர் கதையாகி விட்டது.

இதுவரை முஸ்லிம்கள் பசுவின் பெயரால் கொல்லப்பட்டனர். இப்போது இந்துக்களும் கொல்லப்படுகின்றனர் என்பதை சமீபத்திய நிகழ்வு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

சுபோத்குமார் என்பவர் அக்லாக் படுகொலையை விசாரித்து வருகின்ற ஒரு நேர்மையான காவல் ஆய்வாளார் ஆவார். புலந்த்ஷஹர் மாவட்டம் சியானா கிராமத்தில் ஒரு வயல் வெளியில் ஏற்கனவே திட்டமிட்டபடி பசு, கன்றுவின் பிணங்கள் வீசியெறியப்பட்டிருந்தன. அது தொடர்பாக காவல் துறையில் புகார் செய்யப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு காவல்துறை பார்வையிட சென்று திரும்புவதற்குள்ளாக 500 பேர்கள் காவல் நிலையத்தில் திரள்கின்றனர்.

காவல்துறை வேண்டுகோளை புறக்கணித்து கலவரத்தில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக, வன்முறைக்கும்பலைக் கலைக்கவும், தற்காப்பிற்காகவும் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்துகின்றது. இந்த கலவரத்தில் வன்முறைக் கும்பல்கள் காவல் ஆய்வாளர் சுபோத்குமார் சிங்கை சுட்டுக் கொன்று விடுகின்றனர். இது உண்மையில் தற்செயலாக நடந்த கலவரமல்ல. திட்டமிட்டே நடத்தப்பட்ட கலவரமாகும்.

முஹம்மது அக்லாக் படுகொலையை நேர்மையான முறையில் விசாரித்த சுபோத் குமார் சிங்கை மும்பையில் மாலேகான் குண்டுவெடிப்பை விசாரித்து காவி பயங்கரவாதத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த நேர்மைமிகு ஐபிஎஸ்அதிகாரி ஹேமந்த் கர்கரேவை போன்றே திட்டமிட்டே பசுக்குண்டர்கள் கொன்றிருக்கின்றார்கள்.

அரசு பதவியில் இருக்கும் ஒருவருக்கே இந்த நிலை என்றால் நாட்டு மக்களை காவிகள் எந்த அளவுக்கு அச்சுறுத்தி வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். பட்டப்பகலில் நடந்த ஒரு காவல் ஆய்வாளரின் படுகொலை உ,பி.யின் காட்டாட்சி தர்பாரைத் தான் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாட்டை சுடுக்காடாக ஆக்கிக் கொண்டிருக்கும் பசுக்குண்டரகளை கண்டித்து ஒரு வார்த்தை வாய் திறக்காத முதல்வர் ஆதித்யாநாத் பசுவதை தடுப்பதற்கும் சட்டவிரோதமான பசு விற்பனையை கண்காணிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று 75 மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் துறை கண்காணிப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பது எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் இருக்கின்றது.

ஒவ்வொரு தடவை முஸ்லிம்கள் பசுவின் பெயரால் கொல்லப்படும்போதெல்லாம் அந்த பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அல்லது விற்பனை செய்ததாக அல்லது பசுவை விற்பனைக்கு கடத்தி சென்றதாக வழக்கு பதிவுச் செய்யப்படுவது ஒரு வாடிக்கையாக ஆகிவிட்டது. அதே அராஜக மரபின் அடிப்படையில் புலந்த்ஷஹரில் 7 முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் மைனர்கள். இதிலும் வேதனைக்குரிய விஷயம் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சம்பவத்தன்று அருகில் உள்ள ஊரில் நடந்த தப்லீக் இஜ்திமாவுக்கு கலந்துக் கொள்ள சென்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது தான் இந்த பொய் வழக்கு பாய்ந்திருக்கின்றது.

முஸ்லிம்கள் மீது சட்டத்தை மீறி வன்முறையை கடைபிடிக்கும் சங்பரிவாரங்கள் நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றே முஸ்லிம்கள் இதுவரை அமைதி காத்துவருகின்றார். இனியும் இந்த பசுக்குண்டர்களின் காட்டு தர்பார் தொடருமானால் முஸ்லிம்களும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க தயங்க மாட்டார்கள் என்று மத்தியிலும் மாநிலங்களிலும் சட்டத்திற்கு புறம்பான, காட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கும் காவி, காட்டு மிராண்டி அரசாங்கங்களை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் எச்சரிக்கின்றது..

இப்படிக்கு

இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

ஊடக தொடர்புக்கு :9789030302