கடந்த 13-2-2010 அன்று மாலை சைதாப்பேட்டை சார்பனாமேடு பகுதியில் தெருவில் நடந்த சென்ற இரு முஸ்லிம் பெண்களின் புர்காவை பிடித்து இழுத்து சில விஷமிகள் சில்மிஷம் செய்துள்ளனர்.
இதனைத் தட்டிக் கேட்ட அப்பகுதியினரை அவர்கள் தாக்கி விட்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சார்பனாமேடு ஜமாஅத் கமிட்டியினர் காவல்துறையிடம் அளித்த புகாரை முறையாக விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே காவல்துறை தடியடி நடத்தியுள்ளது.
மேலும் அப்பாவி மூஸ்லிம்களின் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு பெண்களை அடித்து விட்டு ஆண்களை ஏதோ தீவிரவாதி போல் கைது செய்து அழைத்துச் சென்றனர். எவ்வித புகாரும் இல்லாமல் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் அளவிற்கு காவதுறையை தள்ளியது எது? இரவு நேரங்களில் வாரண்ட் இல்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற ஆணையை மாவட்ட காவல்துறை மீறியிருப்பது, மாவட்ட காவல்துறை காவித்துறையாக மாறிவிட்டதையே உணர்த்துகிறது.
நடந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.மாறாக ஏதும் அறியாத அப்பாவிகள் கைது செய்யப்படுவது சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு நேரும் அவமானமாகும்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் களமிறங்கி கடந்த 15-2-2010 அன்று இது தொடர்பாக மாவட்ட தலைவர் ஃயாஸ் அஹ்மத் தலைமையில் பிரஸ் மீட் ஐ கூட்டியது.
மேலும் உண்மைக் குற்றாவளிகளை கைது செய்யக் கோரியும், இதில் ஒன்றுமறியா அப்பாவிகளை விசாரித்து உடனடியாக விடுவிக்கக் கோரியும், நள்ளிரவில் வீடு புகுந்து 50 அப்பாவிகளை கைது செய்த காவல் துறை அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கடந்த 17-2-2010 அன்று நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது: