”முஸ்லிம்களை வன்முறைகளுடன் இணைக்காதீர்கள்” விஸ்வரூபம் பட தனிக்கை குழுவில் இடம் பெற்ற முஸ்லிம் உறுப்பினரின் குமுறல்!

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைபடுத்தும் வன்னமும் முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்திரிக்கும் வண்ணமும் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்திலும் மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களில் தடை செய்யப்பட்டதும், கூத்தாடிகள் கூடி கூடி டிவிகளில் பேசுவது என்னெவென்றால் , ”ஒரு முஸ்லிம் தான் இந்த படத்தை தனிக்கை செய்து  அனுமதி அளித்துள்ளார் முஸ்லிம்கள் தேவையில்லாமல் எதிர்க்கின்றார்கள்” .

இதற்கு பதிலடி கொடுக்கும் வன்னம் விஸ்வரூபம் படத்தின் தனிக்கை குழுவில் இடம் பெற்றிருந்த ஹசன் முகம்மது ஜின்னா தற்போது பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில்

”தற்போது எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள் அந்த தனிக்கை குழுவில் இருந்திருந்தாலும் விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் காரணம் பெரும்பான்மை அடிப்படையில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்” தனிக்கை செய்பவர்கள் தங்களது சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தனிக் செய்யக் கூடாது  என்பது விதி முறையாகும்.

அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை.

தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் வேண்டுகோளுமாகும். ”

நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, என் மனதுக்கு சரியென்று படுவதை எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுத்துவேன். எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்பட எந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும்.

எனக் கூறியுள்ளார்.

இவர் அளித்துள்ள பேட்டியில் இருந்து ஹசன் முகம்மது ஜின்னா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தும் மற்ற பாசிசி சிந்தனை கொண்ட முஸ்லிமல்லாத பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த படத்திற்கு  அனுமதி அளித்து வென்டுமென்றே சான்றிதழ் அளித்துள்ளது வெட்டவெளிச்சாமாகியுள்ளது.

கூத்தாடிகளின் முக்கியமான வாதமான ”தனிக்கை குழுவில் இருந்த ஒரு முஸ்லிமே இதற்கு சான்றிதழ் அளித்துள்ளார்” என்பதும் பொய்யானது..

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே இதற்கு சான்றிதழ் அளித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது..