முஸ்லிம்களின் பரிதாதப நிலையை பரிணமிக்கும் அரசு கணக்கெடுப்பு – சல்மான் குர்ஷித்

முஸ்லிம் மாணவர்களின் மேல்நிலைக்கல்வி சேர்க்கை பட்டியல் (தாழ்த்தப்பட்ட) வகுப்பைச் (SC) சார்ந்தவர்களை விட மிகவும் குறைவாக உள்ளதை அரசு கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேல்நிலைக்கல்வி என்பது +1 மற்றும் +2 வகுப்புக் கல்வியைக் குறிக்கும்.

ராஜ்ய சபையில் இந்த தகவலை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், 64வது சுற்று (2007-08) தேசிய புள்ளியியல் கணக்கீடு முஸ்லிம்களின் சேர்க்கை மொத்த சேர்க்கையில் 10.2% உள்ளதாக பதில் அளித்துள்ளார். இந்த கணக்கெடுப்பில் பட்டியல் (தாழ்த்தப்பட்ட) வகுப்பு (SC) மற்றும் பின்தங்கிய வகுப்பு (OBC) முறையே 11.3% மற்றும் 12.5% ஆகும்.

பழங்குடியினரின் (ST) மேல்நிலைக்கல்வி சேர்க்கை 9.8%, இது முஸ்லிம்களை விட 0.4% மட்டுமே குறைவு. நகர்ப்புறங்களில் வெறும் 5% சதவீதமும், கிராமப்புறங்களில் வெறும் 4.5% சதவீதாமும் மட்டுமே மேல்நிலைக்கல்வி சேர்க்கையில் முஸ்லிம்கள் இடம் பெறுகின்றனர்.

இந்த விவரம் 2007-08க்கான தேசிய புள்ளியியல் கணக்கீட்டின் அடிப்படையில் உள்ளது. முஸ்லிம்களின் சமூக-பொருளாதார நிலையை ஆராய அமைக்கப்பட்ட சச்சார் கமிஷன் 55வது சுற்று (1999-2000) மற்றும் 61வது சுற்று (2004-05) தேசிய புள்ளியியல் கணக்கெடுப்பை அடிப்படையாகக்க் கொண்டது.

55வது சுற்று (1999-2000) மற்றும் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தகவலை நீதியரசர் ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கை ஆராய்ந்து, இந்த அவலத்தைப்போக்க இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.

மேலும் இந்த புல்லிவிவரத்தைப்பற்றிக் கூறுகையில், இந்த அரசு சிறுபான்மையினரின் நலனுக்காக பிரதமரின் 15-அம்ச திட்டம் மற்றும் பன்-பிரிவு மேம்பாடு போன்ற சிறப்பு பகுதி மேம்பாடு திட்டம் போன்றவை 90 சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார் குர்ஷித்.

“இந்த அரசு சச்சார் கமிட்டியின் அறிவுறுத்தலின் படி முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் முன்னேற்றத்திர்க்கான் பல முடிவுகளை எடுத்துள்ளது” என்றார் அவர்.

Rediff ஆங்கில செய்தி

தமிழில் அல்மதராஸி