முஸ்லிமைக் காஃபிராக்கிய கொள்(ளை)கை கூட்டம்(?)

மதுரையில் விபச்சாரத்தைத் தடுக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஒரு பெண்ணை ஆட்டோவில் கடத்தி கையும் களவுமாக என்று சொல்வார்களே அதைப் போல பெண்ணும், ஆட்டோவுமாகப் பிடிபட்ட எஸ்.டி.பி..ஐ நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களைப் போலீஸ் சிறையில் தள்ளியது. இவர்களது கொள்கைப் பிடிப்பைப் பற்றி உணர்வு வார இதழ் ஆதாரப்பூர்வமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியது.

இந்தக் கேடு கெட்டவர்களை நல்லவர்கள் என்று நம்பிய நடுநிலையாளர்களும் இவர்களைக் காரித்துப்ப இந்த விஷயத்தில் கதிகலங்கிப் போன கொள்கை(?) குன்றுகள் வேறுவழியின்றி பல பொய்களையும் கட்டுக் கதைகளையும் அவிழ்த்து விடத் தொடங்கியுள்ளனர். அவர்களது பொய் மூட்டைகளை ஒவ்வொன்றாக இப்போது அம்பலப்படுத்துவோம்.

புளுகு மூட்டை 1:

முஸ்லிமைக் காஃபிராக்கிய கதை:

”கடந்த 12.1.11 வியாழன் அன்று மதுரை மஹபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கடத்தியதாக மதுரை மாவட்ட எஸ்.டி.பி.ஐயின் 29 வது வார்டு கிளைப் பொருளாளர் அல்லாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ துணைச் செயலாளர் பரக்கத், அந்தப் பகுதியின் எஸ்.டி.பி.ஐ செயல் வீரர் பாபு ஆகியோர் உட்பட நான்கு பேரை எஸ்.எஸ்.காலணி காவல்துறை கைது செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”

மேற்கண்டவை தான் இவர்களை அம்பலப்படுத்தியது குறித்த உணர்வு இதழில் வெளியான வாசகங்கள். இதில் அந்தப்பகுதி எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர் பாபு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நாம் வைத்த குற்றச்சாட்டிற்கு இந்த மூளை வரண்ட கூட்டம் தரும் பதில் என்ன தெரியுமா?

”கைது செய்யப்பட்டவர்களில் பாபு என்ற மாற்று மதத்தைச் சேர்ந்தவரும் உண்டு, அதை அவர்களே வெளியிட்டுள்ளார்கள், அப்படி இருக்க பாபு எப்போது இஸ்லாமியப் போராளியானான்? என்பதும் நமக்குத் தெரியவில்லை”.

எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர் பாபு என்பவர் பெண் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று பகிரங்கமாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளோம். அதற்கு இந்தக் கூட்டம் அளிக்கும் பதில் அவன் எப்போது இஸ்லாமியப் போராளியானான்?. அவன் தான் காஃபிராச்சே! என்பது தான். இவர்கள் தாங்கள் நல்லவர்கள் தான் என்ற பொய்யை நிலைநாட்ட எத்தகைய பொய்யையும் சொல்லத் துணிவார்கள் என்பதை இவர்களது இந்த அண்டப் புளுகின் மூலமாக அறிய முடிகின்றது.

கடத்தலில் ஈடுபட்ட மூவரில் ஒருவரான பாபு என்பவர் முஸ்லிமாக இல்லாவிட்டாலும், எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர் என்று இருந்தாலே நம்முடைய குற்றச்சாட்டு உண்மையாகி விடுகின்றது. காரணம் என்னவென்றால் இவர்களது அமைப்பில் தான் காஃபிர்களும் பொறுப்பாளர்களாக இருக்கலாமே! அப்படியிருக்கையில், இவர் எங்களுடைய இயக்கத்தின் செயல் வீரர் இல்லை என்பதை மறுக்காமல் பாபு என்பவர் முஸ்லிமே இல்லை என்று மறுக்கின்றது இந்த கூறு கெட்ட கூட்டம்.

மதுரைப் பகுதியில் பாபு என்ற பெயரை முஸ்லிம்களும் வைப்பார்கள் என்பது பொது மக்களுக்குத் தெரியாது என்று தப்புக்கணக்குப் போட்டு பாபுவைக் காபிராக்கி விட்டனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரையே காபிராக்கும் கொடிய கூட்டம் இது என்பது இப்போது தெரிய வந்த உண்மையாகும். பாபு என்பவர் இவர்கள் சொல்வது போல காஃபிர் இல்லை. மாறாக, அந்தப் பகுதி எஸ்.டி.பி.ஐ யின் இஸ்லாமிய (?) செயல் வீரர். அவரது தந்தை பெயர் ரஹீம். தாயார் பெயர் ஜஹபர் நிஷா. ரஹீமுக்கும் ஜஹபர் நிஷாவுக்கும் பிறந்து பின்னர் மதம் மாறிவிட்டார் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இவர்கள் தாங்கள் நல்லவர்கள் என்பதை நிலைநாட்ட முஸ்லிமாக இருந்து கொண்டு இவர்களது அமைப்புக்காக உழைத்தவரை காஃபிராக்கி இஸ்லாத்தைவிட்டு வெளியேற்றியுள்ளனர்.

புளுகு மூட்டை 2:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் – எஸ்.டி.பி.ஐ. க்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்!
இப்படி ஓர் அரசியல் பேரியக்கம் தேவை என்பதை உணர்ந்து, அதை உருவாக்க முயற்சி எடுத்தது, உதவி செய்தது என்பதை தவிர எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் வேறு எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த மதத்தையும், இயக்கத்தையும், கொள்கைகளையும் சார்ந்தவர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உறுப்பினராக இணைய முடியும்; நிர்வாகிகளாகவும் வர முடியும்.

மேற்கண்டவை தான் இவர்கள் விடும் பயங்கரமான அண்டப்புளுகு நம்பர் 2.

இந்த புளுகுதலை தற்போது ஏன் அவிழ்த்து விடுகிறார்கள் என்றால், இவர்கள் செய்த ஊழல் பட்டியல்களை நாம் பட்டியல் போட்டோம்.

ஊழல்களின் பட்டியல்:

1.ஏழைகளுக்கு நாங்கள் தோல் பணத்தை வசூலிக்கின்றோம் என்ற பெயரில் வசூல் செய்து வாரிச் சுருட்டியது,
2.பித்ராவை வசூலிக்கிறோம் என்ற பெயரில் ஏப்பம் விட்டது,
3.மொத்தமே 20பேர் படிக்கும் மதரஸாவிற்கு வசூல் செய்கின்றோம் என்ற பெயரில் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வாயில் போட்டுக் கொண்டது,
4.பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிதியுதவி என்ற பெயரில் பல லட்சங்களை வசூலித்து வாரிச் சுருட்டியது,
இது போன்ற இவர்களுடைய அத்தனை அத்தனை அஜண்டாக்களிலும் தாங்கள் கேடுகெட்டவர்கள் என்ற தனி முத்திரை பதிக்க இவர்கள் தவறியதில்லை என்று நாம் வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாமலும், வேறு வழியின்றியும், அப்படி பதில் சொல்லாமல் இருந்தால் அடுத்து வாரிச் சுருட்ட முடியாது என்ற பயத்திலும், இவர்கள் தற்போது அவிழ்த்து விடும் ஆகாசப்புளுகு மூட்டை தான் பாப்புலர் பிரண்ட் என்ற இயக்கத்துக்கும் எங்களுக்கும் தற்போது எந்த சம்பந்தமுமில்லை என்பதாகும்.

கேழ்வரகில் நெய் வடிகின்றது என்று சொன்னால் சமுதாய மக்கள் நம்பி விடுவார்களா என்ன? இவர்கள் யார்? இவர்களது கேடுகெட்ட கொள்கை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.

தற்போது இப்படி இவர்கள் அந்தர் பல்டி அடிக்க காரணம், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் வாரிச்சுருட்டலாம் மக்கள் நம்மை நம்பி ஏமாந்து பணத்தை தருவார்கள். நன்றாக ஏப்பம் விட்டுவிட்டு அந்த இயக்கத்தை விட்டுவிட்டு இன்னொரு பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கிவிட்டு மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட இயக்கத்திற்கும், எங்களது இந்த இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அறிவித்துவிட்டு, அடுத்த கட்ட சுருட்டலுக்கு ஆயத்தமாகலாம் என்பதுதான் இவர்களது தற்போதைய திட்டம் என்பது இவர்களது அறிவிப்பு வாயிலாக தெளிவாகின்றது.

புளுகுமூட்டை 3:

விபச்சாரிகளுக்கு பர்தா அணிவித்த எஸ்.டி.பி.ஐ:

கடந்த 12.01.2011 அன்று மேற்படி பெண்கள் பொது இடத்தில் நின்று பிறரைக் கவர்ந்தவர்களாக நின்று கொண்டு அநாகரீகமாக நடந்துள்ளதோடு, பர்தா அணிந்து முஸ்லிம் இளைஞர்களைக் கவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர் என்று தங்களது அடுத்த புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்தச் செய்தியாவது துளியாவது உண்மையா என நாம் ஆய்வு செய்தால், இவர்கள் சொல்லக் கூடிய இந்த புளுகு மூட்டையை அவர்களது எஸ்.டி.பி.ஐ யின் 29வது வார்டு தலைவர் சீனி முஹம்மது அவர்களே மறுக்கின்றார்.

(இந்த சீனிமுஹம்மது என்பவர் தான் மதுரை மஹபூபாளையம் பகுதி 29வது வார்டு எஸ்.டி.பி.ஐ நிர்வாகத்தில் கடத்தலில் ஈடுபடாத நல்ல நிர்வாகி)

எஸ்.டி.பி.ஐ யின் 29வது வார்டு தலைவர் சீனிமுஹம்மது அவர்களிடத்தில் இந்தச் சம்பவம் குறித்து கேட்ட போது, சம்பவ தினத்தன்று கடத்தப்பட்ட அந்தப் பெண் மிகவும் கவர்ச்சியான உடையணிந்தவளாக, உடலுக்குள் உள்ளே அணிந்துள்ளவையும், அங்க அவயங்களும் வெளியே தெரியக் கூடிய அளவுக்கு ஆடையணிந்தவளாக நின்று கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைத் தான் அவர்கள் கடத்தினார்கள் என்று அவர் தெரிவித்தார். (இந்தப் பொய்யர் கூட்டம் அதை மறுக்குமேயானால், அதற்குரிய ஆதாரத்தை வெளியிடுவோம்)

பர்தா அணிந்து இஸ்லாத்தைக் கேவலப்படுத்தினாள் என்பது உண்மையா? ஆபாசமாக ஆடை அணிந்து இளைஞர்களைக் கெடுத்தாள் என்பது உண்மையா?

இந்த விஷயத்திலும் இவர்கள் எத்தகைய கேடுகெட்டவர்கள் என்பதை தங்களது கேவலபுத்தியை வெளிக்காட்டி மற்றுமொருமுறை நிரூபித்துள்ளார்கள். தாங்கள் நல்லவர்கள் என்பதை நிலைநாட்ட இவர்கள் விபச்சாரி என்று சொல்லக்கூடிய பெண்ணை பர்தா அணிந்திருந்தாள் என்று கூறி பர்தாவின் புனிதத்தை அசிங்கப்படுத்தியுள்ளனர். இந்தக் கேவலப்பட்ட கூட்டம் தங்களது திருகுதாளத்தை மறைக்க எத்தகைய நிலைக்கும் கீழி இறங்குவார்கள் என்பது தற்போது இவர்களது இந்தக் கேவலபுத்தியின் வாயிலாகத் தெளிவாகியுள்ளது.

புளுகுமூட்டை 4:

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக கதைவிட்ட கதை:

இத்தகைய கேவலப்பட்ட செயலைச் செய்த இந்தக் கொள்கைக் கூட்டம் அதற்கு ஆதரவாக தங்களது நிர்வாகிகளையும், வழக்கறிஞரையும் அனுப்பி காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு காவல்துறையின் எச்சரிக்கைக்குப் பயந்து பின்னர் பின்வாங்கி விட்டு தற்போது எஸ்.டி.பி.ஐக்கும் இந்த கடத்தலுக்கும் சம்பந்தமில்லை, கடத்தலில் ஈடுபட்ட எவரும் எஸ்.டி.பி.ஐயின் செயல் வீரர் கூட கிடையாது அவர்கள் காஃபிர்கள் என்று முதலில் கதை விட்டனர். இவர்கள் தான் எஸ்.டி.பி.ஐயின் நிர்வாகிகளாயிற்றே! கடத்தல் சம்பவம் நடைபெற்ற நாள் வரையிலும் இவர்கள் தான் அந்தப் பகுதி நிர்வாகிகளாக இருந்துள்ளார்கள். இவர்களைக் கைது செய்த காவல்துறை இவர்களை விசாரிக்கும் போது கூட நாங்கள் எஸ்.டி.பி.ஐயின் 29வது வட்ட நிர்வாகிகள், என்று காவல்துறையினரிடத்தில் கூறியுள்ள சம்பவம் உட்பட அனைத்து விஷயங்களும் தெரிந்த நடுநிலையாளர்கள் இவர்களிடத்தில் கேள்வி கேட்க, அதற்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக கடத்தலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எங்களது அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் என்று வேறு வழியின்றி ஒப்புக் கொண்டு விட்டனர்.

இதோ அவர்கள் ஒப்புக் கொண்ட வாசகங்களை அவர்களது வார்த்தைகளிலிருந்தே எடுத்துக் காட்டுகின்றோம்.

இதில் பாஷா என்பவர் எந்தக் கட்சியையும் சேராதவர். பரக்கத், அல்ஹாஜ், பாபு என்ற பாதுஷா ஆகிய மூவரும் த.மு.மு.க.வில் இருந்து விலகி எஸ்.டி.பி.ஐ.யில் சில மாதங்களுக்கு முன் இணைந்தவர்கள். பரக்கத் கிளை துணைச் செயலாளராகவும் அல்ஹாஜ் பொருளாளராகவும் பொறுப்பு வகித்தனர்.

மேற்கண்டவாறு தங்களது விளக்கத்தில் அவர்கள் எஸ்.டி.பி.ஐ சேர்ந்தவர்கள் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டு, பிறகு அவர்களை நாங்கள் ஏற்கனவே நீக்கி விட்டோம் என்று தற்போது நாடகமாடி வருகின்றனர். இந்தக் கேவல செயலை செய்தவர்கள் முன்னால் தமுமுக வினர் தான் என்பதையும் சந்தடி சாக்கில் பதிய வைத்துள்ளனர். ம.ம.க இவர்களை ஆதரிப்பதில் ஒருவித நியாயமிருக்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

காஃபிராக ஆன பாபு என்பவர் பாபு என்ற பாதுஷா என மாறி விட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ யில் பொறுப்பு வகித்தவர்களை இவர்கள் இரண்டு மாதத்துக்கு முன்பே நீக்கி விட்டார்களாம். ஏற்கனவே கடத்தலில் ஈடுபட்ட பாபு என்ற எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரரை அவர் ஒரு காஃபிர். அவர் எப்போது இஸ்லாமிய போராளியானார் என்று சொல்லி முஸ்லிமை காஃபிராக்கியது போல, இப்போது கடத்தலில் ஈடுபட்ட அனைவரையும் நாங்கள் ஏற்கனவே நீக்கிவிட்டோம் என்று கூறி அனைவரது காதிலும் பூச்சுற்ற முயல்கின்றது இந்த மோசடிக்கும்பல்.

புளுகுமூட்டை 5:

”விபச்சாரிக்கு ஆதரவு; காவல்துறைக்கு பல்லக்கு” என்ற கட்டுக்கதை:

இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து கொண்டு விபச்சாரத்திற்கு அழைத்த அப்பெண்களின் செயல்களைக் கண்டு நாம் குறிப்பிட்ட அந்த நபர்கள் நாம் மேலே குறிப்பிட்ட இரு பெண்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் போது புல்லட் ராணி எனும் பெண் தப்பி விட்டாள். குண சுந்தரியை மட்டும் பிடித்து ஆட்டோவில் ஏற்றி சி(3) காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் அங்கு விபச்சாரி மீது அவர்கள் கொடுத்து புகாரை வாங்க மறுத்த காவல்துறை (மாமூலோடு தானே விபசார விடுதிகள் நடைபெறுகிறது) புல்லட் ராணியிடமிருந்து ஒரு புகாரைப் பெற்று பெண்ணை கடத்தியதாக நான்கு பேரின் மீதும் புகாரை பதிவு செய்தது காவல்துறை.

இது தான் மதுரையில் நடந்த சம்பவம்

(விபச்சாரிகள் பர்தா அணிந்திருந்தார்கள் என்பது இவர்கள் சொல்லும் கடைந்தெடுத்த பொய் என்பதை நாம் ஏற்கனவே முன்னால் விளக்கியிருக்கின்றோம்)

இது தான் அவர்களது உலகமகா புளுகல் நம்பர் 5.
• கடத்தியவர் முஸ்லிமே இல்லை; காஃபிர் என்றனர்
• கடத்தியவர்கள் எங்களது இயக்கத்தைச் சேர்ந்தவர்களில்லை என்றனர்.
• கடத்தியவர்கள் எங்களது இயக்கத்தவர்கள் தான் அவர்களை நாங்கள் முன்பே நீக்கி விட்டோம் என்றனர்.
• கடத்தியவர்கள் முஸ்லிம்கள் தான். அவர்கள் அந்தப் பெண்ணைக் கடத்தியது எதற்கென்றால் “அந்த விபச்சாரிகளைப் பிடித்துக் கொண்டுபோய் போலீஸில் ஒப்படைப்பதற்காகத் தான் என்பது தான் இவர்கள் அடிக்கும் அடுத்த அந்தர் பல்டி.

மேலே அவர்கள் குறிப்பிட்டவைகளில் இரண்டு விஷயங்களை இந்த மோசடிக்கும்பல் பதிவு செய்கின்றது.

1.அதாவது விபச்சாரியைப் பிடித்து போலீஸில் ஒப்படைக்கத் தான் இந்த கடத்தல்.
2.ஆனால், விபச்சாரிகளை கையும் மெய்யுமாக பிடித்த அப்பாவி இளைஞர்களை, அதாவது அவர்களது பாஷையில் சொல்வதானால் அந்த அப்பாவி தியாகிகளை காவல்துறை அநியாயமாக பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியுள்ளது.

அந்த தியாகிகளுக்கு ஆதரவாகத் தான் ம.ம.கட்சி கௌஸ் களத்தில் குதித்தார் என்பது தான் இவர்களது வாதம்.

அப்படியானால், காவல்துறை விபச்சாரிகளிடத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு விபச்சாரிகளை கையும் களவுமாக பிடித்த தியாகவான்களாகிய அப்பாவி இளைஞர்கள் மீது கடத்தல் வழக்குப்போட்டு உள்ளே தள்ளியிருக்கின்றது என்றால், பொய் வழக்குப்போட்ட காவல்துறைக்கு எதிராகவும், இந்த அப்பாவி(?) இளைஞர்களுக்கு ஆதரவாகவும், இந்த போர்த்தியாகிகள் எந்த போராட்டத்திலும் இறங்காதது ஏன்?

விபச்சாரிகள் கொடுத்த மாமூலில் இவர்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது என்பதால் தான் இவர்கள் போராட்டத்தில் இறங்கவில்லையா?

அத்தோடு மட்டுமில்லாமல், ம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் கௌஸ் அந்த இளைஞர்களுக்கு ஆதரவாகச் செல்லவில்லை. மாறாக இந்தக் கேடுகெட்ட செயலைச் செய்த இளைஞர்களை உள்ளே தள்ளி இவர்கள் மீது வழக்கை நன்றாக ஸ்ட்ராங் பண்ணுங்கள் என்று காவல்துறையிடத்தில் கோரிக்கை வைப்பதற்காகத் தான் அவர் சென்றார் என்று ம.ம.கட்சி தரப்பு சொல்லி வருகின்றது. அப்படியானால், விபச்சாரிகளுக்கு ஆதரவாக அப்பாவி இளைஞர்கள் மீது கேஸ்போட்ட காவல்துறைக்கு ஆதரவாக ம.ம.கட்சி நின்றுள்ளது என்றால், அந்த விபச்சாரிகளிடத்தில் காவல்துறை வாங்கிய மாமூலில் ம.ம.கட்சிக்கு எவ்வளவு பங்கு வழங்கப்பட்டது என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆகமொத்ததில் தாங்கள் செய்த தவறுகளை எப்படியாவது முட்டுக்கொடுத்து பொய்யையும், புரட்டையும் கட்டவிழ்த்து விட்டு நியாயப்படுத்தலாம் என கனவுகண்ட அந்த மோசடிக் கும்பலை அல்லாஹ் அவர்களது விளக்கத்தை வைத்தே அடையாளம் காட்டியுள்ளான் என்று சொன்னால் அது மிகையல்ல. (அல்ஹம்துலில்லாஹ்…)

அவதூறு போஸ்டர் ஒட்டி கேவலப்பட்ட பொய்யர்கள்:

இந்த நிலையில் கேடுகெட்டவர்கள் செய்த கேவலச்செயலை சமுதாய மக்களுக்கு அம்பலப்படுத்திய உணர்வு வார இதழைக்கண்டித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன., விபச்சாரிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் செயல்படுவதாகவும் அவதூறு போஸ்டரை ம.ம.கட்சியின் துணையோடு எஸ்.டி.பி.ஐ ஒட்டியுள்ளது.

விபச்சாரிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தும், உணர்வு வார இதழும் செயல்பட்டது என்றால், அந்த விபச்சாரிகளுக்கு ஆதரவாக ம.ம.கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் களம்இறங்கியது ஏன்? அந்த கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்களை உள்ளே தள்ளுங்கள் என்று காவல்துறையிடம் சொன்னது ஏன்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் விபச்சாரிகளையும் விபச்சாரிகளை கடத்தியவர்களையும் கண்டிக்கவல்லவா செய்தது. நீங்கள் தானே அந்த விபச்சாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளீர்கள் அவர்களோடு உங்களுக்கு உள்ள “டீலிங்” என்ன என்று கேட்டு பொதுமக்கள் இவர்களை கேட்டு காரித்துப்ப தற்போது கடத்தலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐயும் முட்டுக்கொடுத்த ம.ம.கட்சியினரும் செய்வதறியாது விழிபிதுங்கியுள்ளனர்

உணர்வு வாசகர் மன்றம்

இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்!