முத்தலாக் மசோதாவை ந நிறைவேற்றிய மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இஸ்லாமியர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் முத்தலாக் என்ற ஒன்று கிடையவே கிடையாது. இஸ்லாமியர்களின் வழிகாட்டியாக விளங்கும் நபிகள் நாயகம் (ஸஸ்) அவர்கள் காலத்திலிருந்து ஒரே சமயத்தில் மூன்று தலாக் சொன்னாலும்
அது ஒரு தலாக்காகத்தான் கருதப்படும்.

ஆனால் முத்தலாக் குறித்து இஸ்லாமியர்களின் தரப்பில் பலவிதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டும் அதையெல்லாம் ஏற்காமலே இஸ்லாமியர்களை பழிவாங்கும் ஒரே நோக்கிலேயே மத்திய அரசு முத்தலாக் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது.

இஸ்லாமியப் பெண்களின் உரிமையைப் பாதுகாக்கின்றோம் என்று கூறிக்கொண்டு செயல்படும் மத்திய அரசு முத்தலாக் கொடுப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று அறிவிக்கின்றது.

முத்தலாக் கொடுத்தால் செல்லாது என்று அறிவுரை சொல்லி கணவன் மனைவியை சேர்ந்து வாழச் செய்வோம் என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கின்றது.

ஆனால் முத்தலாக் கொடுத்தவனை சிறையில் அடைத்து விட்டு அவன் மனைவியையும் பிள்ளைகளையும் மூன்று ஆண்டுகள் நடுரோட்டில் விட்டால் இருதரப்பு வாழ்க்கையும் நாசாமாகி விடும் அதுமட்டுமின்றி 3 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு அந்த ஆண் எப்படி தன் மனைவியுடன் வாழ்வான்? இதற்குப் பெயர்தான் இஸ்லாமியப் பெண்களின் மீதான கரிசனமா?

தலாக் விவகாரத்தில் இஸ்லாம் மிகவும் அற்புதமான வழிமுறையைக் கொடுத்துள்ளது. நீதிமன்றங்கள் கூட வழக்கை இழுத்தடித்து விட்டு ஒரே தடவையில் கணவன் மனைவியைப் பிரித்து விடும்.

ஆனால் இஸ்லாமிய சட்டம் கணவனுக்கும் மனைவிக்கும் 3 தவனைகள் அளிக்கிறது. அதற்குள் சமரசம் ஏற்பட்டால் இருவரும் இணைந்து வாழலாம். ஆனால் இந்திய சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தில் இதுபோன்ற தவனைகள் இல்லை.

முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல! ஒட்டுமொத்த பெண்களுக்குமே இஸ்லாமிய தலாக் சட்டம் மட்டும்தான் சிறந்த பாதுக்காப்பாக அமையும்.

முத்தலாக் சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் திருச்சியில் பல லட்சம் இஸ்லாமியப் பெண்கள் கூடி இஸ்லாமிய சட்டமே எங்களுக்கு பாதுகாப்பு என வலியுறுத்தினார்கள்.

ஆனால் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் முழுக்க முழுக்க இஸ்லாமிய ஆண்களையும் பெண்களையும் பழிவாங்கிய தீருவேன் என்கிற ரீதியில் மத்திய அரசு செயல்படுவது அம்பலமாகி விட்டது.

மோடி அரசின் தோல்விகளை மறைக்க இஸ்லாமியர்களை வம்புக்கு இழுத்து மக்களை மடைமாற்றும் தொடர்ச்சியான காரியத்தையும் மோடி அரசு செய்து வருகின்றது.

இஸ்லாமிய சட்டத்தில் மூக்கை நுழைத்து இஸ்லாமியர்களை பழிவாங்கத் துடிக்கவே மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

ஊடகத்தொடர்புக்கு:9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்