முதல் முறையாக லண்டனில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

தவ்ஹீத் வரலாற்றில் முதல் முறையாக லண்டனில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று (24-5-2009) நடைபெற்றது. இதில் மௌலவி பி.ஜே அவர்கள் ஆன்லைன் கான்ஃபிரன்ஸிங் மூலம் இந்தியாவில் இருந்து கொண்டு நேரடியாக லண்டன் தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதில் அளித்தார்கள்.

லண்டனில் உள்ள நம் தவ்ஹீத் சகோதரர்கள் இந்நிகழச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்று அதிகமான நிழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முதல் முறையாக நடைபெற்றது என்றாலும் 100 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.