முதல் முறையாக மும்பையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்

03 (6)02 (5)அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த 07/02/2010 ஞாயிற்றுக் கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை சீத்தா கேம்ப் கிளையும் சித்தார்த்த முனிசிபல் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் ”பயங்கரவாத எதிர்ப்பு இரத்த தான முகாம்” சீத்தாகேம்ப் உருது பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இது மும்பை வாழ் முஸ்லிம் ஜமாஅத்துகளின் மத்தியில் நடைபெறும் முதல் பொது இரத்த தான முகாம் ஆகும்.

இந்த இரத்த தான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை சீத்தாகேம்ப் கிளை தலைவர் அபுயாஸ்மின் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அவர் தனது தலைமையுரையில் இஸ்லாம் பயங்கரவாதத்தை அணு அளவு கூட ஆதரிக்கவில்லை என்றும் இது ஒரு மனித நேயமிக்க மார்க்கம் என்பதனையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கினார்கள்.

இதில் கலந்து கொண்ட மும்பை டிராம்பே சரக காவல்துறை அதிகாரி அவர்கள் இந்த மனித நேய பணியினை பார்த்து வெகுவாக பாராட்டி இது போன்ற பணிகளை மத பேதம் பாராமல் அனைவரும் செய்ய வேண்டும் என்றும் இதனால் சமூகத்தில் மக்களிடையே அன்பும் அமைதியும் நல்லிணக்கமும் தழைத்தோங்கும் என்றும் இந்த பணியால் பயங்கரவாதிகள் ஓரங்கட்டப்பட்டு அடையாளம் காட்டப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.

மேலும்வருங்காலத்தில் செய்யப்படும் இதுபோன்ற நற்பணிகளுக்கு காவல்துறை எப்போதும் உதவியும் ஒத்துழைப்பும் தரும் என்று உறுதி அளித்தார்கள்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய சித்தார்த்த முனிசிபல் மருத்துவமனை இரத்த வங்கி தலைமை மருத்துவர் திருமதி. தன்வந்தி பேக்கே அவர்கள் இஸ்லாமிய பெண்களும் ஆண்களுக்கு நிகராக இரத்த தானம் செய்வதை பார்த்து ஆச்சரியத்தோடு பாராட்டினார்கள்.

இந்த இரத்த தானத்தில் சுமார் 106 பேர் கலந்து கொண்டபோதும் 55 பேரிடம் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் இரத்த தானம் செய்ய முடிந்தது.

இது போன்ற பணிகளை மும்பையில் உள்ள அனைவரும் செய்வதற்கு முன்னுதாரணத்தினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை சீத்தா கேம்ப் கிளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.