முதல் முறையாக அஜ்மனில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

ajman1அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19.06.2009 வெள்ளிக்கிழமை அன்று அஜ்மான் மண்டலத்தில் முதல் முறையாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

ajman2ஓர் ரெஸ்டாரண்டின்; மேல்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி சகோ.ஜாகிர் அவர்களின் வரவேற்புரையுடன் மாலை 7.15 மணிக்கு தொடங்கியது. 50 மாற்று மத சகோதரர்கள் மற்றும் 50 முஸ்லிம் சகோதரர்கள் கலந்துக்கொண்டு அரங்கத்தை நிரப்பினர்.

கடவுள் இருக்கிறார் என்பதை உங்களால் நிருபிக்க முடியுமா?

கடவுள் இருக்கிறார் என்றால் கொடூரமான இழப்புகளை அவர் ஏன் தடுப்பதில்லை ?

தீவிரவாதத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் வழி என்ன?

மாவட்டத்திற்கு மாவட்டம் முஸ்லிம்களின் வழிமுறைகள் மாறுவது ஏன்?

புலால் உண்ண அனுமதிக்கும் இஸ்லாமிய மார்க்கம், பன்றி இறைச்சியை தடுப்பது ஏன்?

இஸ்லாமிய கோட்பாடுகள் என்ன?

போன்ற 16 விறுவிறுப்பான கேள்விகளுக்கு அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமின் இப்ராஹிம் மற்றும் சகோ.பேர்ணாம்பட்டு ஜாகிர் ஆகியோர்; பதிலளித்தனர். கேள்வி கேட்ட அனைத்து சகோதரர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கலந்துக்கொண்ட அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் உலக அதிசயம் என்ற தலைப்பில் மார்க்க அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரையின் இரண்டு குறுந்தகடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

கலந்துக்கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நிகழ்ச்சியின் முடிவில் உணவு பரிமாறப்பட்டது. அஜ்மான் மண்டல நிpர்வாகிகள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். எல்லாப்புகழும் வல்ல ரஹ்மானுக்கே !