மிஸ்ரஃப் கிளை பொதுக்குழு

கடந்த 2-3-2012 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் பயான் மிஸ்ரஃப் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு மண்டல துணை செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீத் மற்றும் பொருளாளர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னதாக சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் ஜும்மாவின் சிறப்பும் அதன் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் – நாகை முஹம்மது இப்ராஹீம்
செயலாளர் – கூத்தாநல்லூர் இக்பால்
பொருளாளர் – முஹம்மது பந்தர் ஜியாவுதீன்
துணை தலைவர் – திருச்சி மைதீன் பாஷா
துணை செயலாளர் – முஹம்மது பந்தர் சாதிக் பாட்சா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட பின் மண்டல துணை செயலாளர் சகோ அப்துல் ஹமீத் அவர்கள் போருப்புதாரர்களின் பணிகளையும் அவர்களின் பொறுப்புகளையும் பற்றி விளக்கினார்.