மினா அப்துல்லாஹ் என்ற பகுதியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்த வருடம் ஈத் பெருநாள் திடல் தொழுகை குவைத் மண்டலத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.அதில் ஒரு இடமான குவைத்தில் மினா அப்துல்லாஹ் என்ற பகுதியில் முதன் முறையாக நபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடை பெற்றது.

தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த சகோதரர் சிராஜுதீன் ஃபிர்தவ்சி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.பல வேலை பளுவிற்கு மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை மினா அப்துல்லா கிளை சகோதரர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் அந்த பகுதியில் இதுபோன்ற நிகழ்ச்சி எந்த ஒரு தடையுமின்றி நடக்கவும் ஸ்பிக் நிறுவனத்தின் வெளி திடலில் தொழுகை நடத்தவும் அல்லாஹ்வின் உதவியால் ஸ்பிக் நிறுவனத்தின் அதிகாரி சகோதரர் சத்தீஸ் மற்றும் சகோ ஆர்.கே அவர்கள் அனுமதி வழங்கி உதவி செய்து கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்!