பன்முகத் தன்னை கொண்ட இந்திய நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் மத வெறியர்களையும் பயங்கராவதிகளையும் உற்பத்தி செய்து புழக்கத்தில் விடுகின்ற ஆர்.எஸ்.எஸ் விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும்,
மேலும் மாலேகான் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அனைத்து குண்டு வெடிப்பு வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளையும், சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும்,
குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சங்பரிவார் தீவிரவாதிகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டத் தவறிய மீடியாக்களைக் கண்டித்தும்.கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.