மாணவர் அணி சார்பாக ஓசூரி்ல் நடைபெற்ற மாணவருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

picture1picture3picture4
picture2கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் TNTJ மாணவரணி சார்பாக மாற்றுமத மாணவர்களுக்குக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஞாயிற்று 13/09/09 கிழைமை மாலை JR பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் TNTJ மாநில மாணவரணி செயலாளர் S.சித்தீக்.M.Tech அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முதலில் “இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், பின்னர் மாற்று மத மாணவர்கள் இஸ்லாத்தை பற்றி கேட்ட கேள்விகளுக்கு S.சித்தீக் அவர்கள் சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார், முஸ்லீம் மாணவர்கள் ஆர்வமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். பின்னர் வருகை தந்திருந்த்த அனைத்து மாணவர்களுக்கும் விருந்த்து அளிக்கப்பட்டது.

இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவரணி செயளாலர் சகோ.இம்ரான்(B.E) அவர்கள் நன்றியுரை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட மாணவரணி சகோதரர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்