மாணவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத உ.பி அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் !

மாணவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத உ.பி அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் !

உத்திர பிரதேசத்தில் 11ஆம் வகுப்பு படித்து வந்த முஸ்லிம் மாணவன் அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கான்பூர் பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படிக்கும் அந்த மாணவன்
முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் தினமும் சோதனை செய்யப்பட்ட பிறகே பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளான். சக மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியர்களால் தீவிரவாதி என அழைக்கப்பட்டு வந்ததால் மனமுடைந்து போன மாணவன் அதிகமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான். தீவிர சிகிச்சைக்குப்பிறகு உயிர் பிழைத்த மாணவன் தனது வாக்குமூலத்தில் இதைத்தெரிவித்துள்ளான்.

மத வெறிபிடித்த ஆசிரியரின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

பிஜேபி ஆளும் மாநிலங்களில் பொய் வழக்கில் முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டு தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் ஆசிரியர்களின் தவறு வெளிப்படையாக தெரிந்து இருந்தும் அவர்கள் மீது உத்திரபிரதேச யோகிஆதித்யநாத் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்துவருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்து, மததுவேசத்தை பரப்புதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான சதி செயல்கள் உ.பி யில் அரங்கேறி வருவது அன்றாட நிக்ழ்வாக உள்ளது.

மாட்டின் பெயரால் நடத்தப்பட்ட மனித படுகொலைகள் அதற்கு நிதர்சன சான்று.

பச்சிளம் குழந்தைகள் ஆக்சிசன் இன்றி இறந்தது உபி அரசின் மனித குல விரோத செயல் ஆகும்.

இவையெல்லாம் இந்த பாஜகவின் அக்கிரமத்திற்கும் அநீதிக்கும் சான்றாக உள்ளது.

இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் இது போன்ற காரியங்களை இனி ஒரு போதும் அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அதன் எதிர்விளைவுகள் நாட்டை அழிவுப்பாதையை நோக்கிச் செல்ல வழி வகுத்துவிடும் என தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை விடுக்கின்றது.

இப்படிக்கு
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.