மாட்டு மூத்திர வியாபாரி பாபா ராம் தேவிற்கு டி.என்.டி.ஜே. பகிரங்க அறைகூவல்!

மாட்டு மூத்திரத்தை மருத்துவமாக பயன்படுத்தலாம் என திருக்குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது என்று மாட்டு மூத்திர வியாபாரி பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.

பகிரங்க அறைகூவல்:
திருக்குர்ஆனில் மாட்டு மூத்திரத்தை குடிக்கச் சொல்லி எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை; மாறாக உடலுக்கு கேடுதரக்கூடிய பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்றும், உடலுக்கு தீங்குவிளைவிக்காத தூய்மையான பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றும் தான் திருக்குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.
மாட்டு மூத்திரம் என்பது உடலுக்கு கேடு தரக்கூடிய அசுத்தமான பொருளாகும்.

அதை குடிக்கச் சொல்லி திருக்குர்ஆன் சொல்லியிருப்பதாக மாட்டு மூத்திர வியாபாரி பாபா ராம் தேவ் பச்சைப் பொய்யைப் புளுகியுள்ளார். எனவே பாபா ராம் தேவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றது.

திருக்குர்ஆனில் மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லி சொல்லப்பட்டுள்ளதாக பாபா ராம் தேவ் சொன்னதை அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் வந்து நிரூபிக்க வேண்டும்.
பதஞ்சலி பாபா ராம் தேவை நேரடியாக களத்தில் சந்திக்கத் தவ்ஹீத் ஜமாஅத் தயார்; ஒரே மேடையில் எங்கள் எதிரில் அவர் இதை நிரூபித்துவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் மாட்டு மூத்திரம் குடிக்க வேண்டும் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவிப்புச் செய்கின்றோம். அதே நேரத்தில் அவ்வாறு அவர் நிரூபிக்கவில்லையானால் மாட்டு மூத்திரம் குடிப்பது உடலுக்குக் கேடானது என்று திருக்குர்ஆன் சொல்லும் செய்தியை அவர் உலக மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கத்தயாரா? என்று பாபா ராம் தேவிற்கு பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம்.

தனது சொல்லில் பாபா ராம் தேவ் உண்மையாளராக இருந்தால் பொதுமேடையில் மக்கள் முன்னிலையில் தவ்ஹீத் ஜமாஅத் முன்பு பாபா ராம் தேவ் இதை நிரூபிக்க வரவேண்டும். அதற்கு அமைக்கப்படும் மேடைக்கு ஆகும் செலவு உட்பட அனைத்து செலவுகளையும் தவ்ஹீத் ஜமாஅத்தே ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளது என்பதையும் இங்கே பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.

குறிப்பு:
முஸ்லிம்களாக இருக்கும் ஹமீத் சகோதரர்களின் ஹம்தர்த் நிறுவன தயாரிப்புகளை நான் எதிர்க்கவிலையே! பிறகு ஏன் இந்து மதத்தைச் சேர்ந்த பாபா ராம் தேவ் ஆகிய எனது பதஞ்சலி பொருட்களை எதிர்க்கின்றீர்கள் என்றும் பாபா ராம் தேவ் பேசியுள்ளார்.
இந்து முஸ்லிம் பிரச்சினையாக இதை மததுவேசத்துடனும், வன்மத்துடனும் திசை திருப்ப பாபா ராம் தேவ் சதி வலை பின்னுகின்றார். ஹமீத் சகோதரர்கள் மாட்டு மூத்திரம் கலந்த பொருட்களை விற்றாலும் அதையும் முஸ்லிம்கள் வாங்கமாட்டார்கள்; அதே நேரத்தில் டாடா உள்ளிட்ட அனைத்து இந்து பெரும்பண முதலைகளின் கடைகளிலும் அதிகமாக பொருட்களை வாங்குவது முஸ்லிம்கள் தான் என்பதையும் பாபா ராம் தேவின் கவனத்திற்கு சொல்லிக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்