மஸ்கட் மண்டலம் – திடல் தொழுகை

மஸ்கட் மண்டலம் சார்பாக முதல்முறையாக  நபிவழியில் “ஈதுல் அத்ஹா” திடல் தொழுகை  (24/09/2015) அன்று சரியாக காலை 6:45மணிக்கு மக்கா சென்டர் ருவியில் நடைபெற்றது. இதில் துபையிலிருந்து வருகை தந்த, சகோ: முஹம்மது நாஸிர் MISC அவர்கள் (அமீரகப் பேச்சாளர்) தொழுகை நடத்தி திடல் உரையாற்றினார். இதில் 100க்கும் அதிகமான ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். திடல் வசூலாக 125 ஓமன் ரியால் இந்திய மதிப்பு 21,462 ஆக வசூல் செய்யப்பட்டது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!