மவ்லூதை கண்டித்து நோட்டிஸ் – தஞ்சை வடக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் முழுவதும் மவ்லிது எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலமும், ஜூம்ஆ உரைகள் மூலமும், தனி நபர் தஃவா மூலமும் முஸ்லிம் மக்களிடையே உள்ள இந்த மூடப்பழக்கத்தை ஒழிக்க பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-தஞ்சை வடக்கு சார்பாக “முஸ்லிம்களின் பஜனை(!) மவ்லித்கள்” என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டு கடந்த 13-2-11 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றது.