மவ்லூதை கண்டித்து இணையம் பகுதியில் பிரச்சாரம்

குமரி மாவட்டத்தில் இணையம் பகுதியில் கடந்த 15-2-11 அன்று சுன்னத் ஜமாஅத்தினர் மீலாது விழா கூட்டம் நடத்தினர். மவ்லூதிற்கு எதிரான நமது கடும் பிரச்சாரத்தின் விளைவாக ” மவ்லூத் ஷிர்க் என்று நீரூபிக்க யாருக்கு இந்த மேடையில் தைரியம் உள்ளது என சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த இமாம் சாவல் விட அங்கு உள்ள நமது சகோதரர்கள் ஆதாரங்களுடன் இதோ நாங்கள் தயார் எனக் கூறி கடிதத்தை நீட்டியதும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

யார் வரப் போகின்றார்கள் என்ற தைரியத்தில் சவால் விட்ட சுன்னத் ஜமாஅத் இமாம் நம் சகோதரர்களை பார்த்ததும் நீங்கள் இங்கேள்ளலாம் வரக் கூடாது வேண்டுமென்றால் தனியாக கூட்டம் போட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

உங்கள் இமாம் சாவல் விட்டார் அதை ஏற்க நாங்கள் தயாராக வந்துள்ளோம் உங்கள் இமாம் அதை ஏற்காமல் சமாளிக்கின்றார் என்று நம் சகோதரர்கள் கூறியதும். ஒளிந்து ஓடினர். அல்ஹம்துலில்லாஹ்!

இதன் பிறகு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கூட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. சுன்னத் ஜமாஅத்தினர் அதை தடுக்க முயன்றனர். ஆனால் அது பயனளிக்கவில்லை! அல்ஹம்துலில்லாஹ்!