மலேசிய சிறையில் வாடும் தமிழ்நாட்டு வாலிபரை விடுவிக்க முதல்வருக்கு கடிதம்: திருவாரூர் TNTJ

திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவருக்கு மலேசிய அரசாங்கம் போலி விசா வைத்திருந்ததற்காக பத்தாயிரம் வெள்ளி அபராம் அல்லது ஒன்றரை ஆண்டி சிறை என அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்துர் ரஹ்மானுக்கு தான் வைத்திருப்பது போலியான விசா என்பது அப்பொழுது தான் தெரியவந்துள்ளது. அவரது குடும்பம் வருமையில் உள்ளதால் அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகிறார்கள்.

தகவல் அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நிர்வாகிள் உடனே இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதி அப்துர் ரஹ்மானை மீட்டு சோந்த ஊருக்கு திருப்பி அனுப்ப எற்பாடு செய்யுமாறு மனு கொடுத்துள்ளனர்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது:

தமிழ் முரசு

தினகரன்