மலேசியாவில் தடை, வெளிமாநிலங்களும் நிருத்திவைக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்

மலேசியா

தமிழகம்,புதுவை , இலங்கை , துபை போன்ற நாடுகளில் அரவே வெளியாகாத விஸ்வரூபம் திரைப்படம் நேற்று மலேசியாவில் வெளியானது. வெளியானதும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மலேசியாவிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் புகாரை தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

ஆந்திரா

மேலும்  இன்று அந்திர மாநில அரசு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்து ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குகளுக்கு நோட்டிஸ் அனுப்பியது.  இருப்பினும் சில திரையரங்குகளில் வெளியாகி எதிர்ப்பு கிளம்பியும் அவைகளும் திரையிடுவதை நிருத்திக் கொண்டன.

கர்நாடாக

கர்நாடக மாநிலம் பெங்களுரில் விஸ்வரூபம் திரைப்படம் பல்வேறு திரையரங்குளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளா

கேரள மாநிலம் பாலக்காட்டில் விஸ்வரூபம் திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொய்யானது..

தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் தான் எதிர்க்கின்றனர் மற்ற மாநிலம் மற்றும் மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை என்று கூறி வரும் கூத்தாடிகளின் வாதம் பொய்யானது என்பது நிரூபனமாகிவிட்டது…