தூத்துகுடியில் உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட தலைமையகத்தில் கடந்த 10.10.2010 அன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மார்க்க விளக்க கூட்டம் மற்றும் இலவச திருமண தகவல் மையம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். கிளை தலைவர் அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார்கள். மாநில அழைப்பாளர் அப்துன் நாசர் அவர்கள் இஸ்லாமிய கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மாவட்ட அழைப்பாளர் அன்சாரி திருமண தகவல் மையம் செயல்படும் விதம் குறித்தும் இதன் அவசியம் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.