மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுதேர்வு: தமிழகத்தில் உள்ள தனி இட ஒதுக்கீட்டிற்க்கு பாதிப்பு?

மருத்துவப் படிபிற்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த வழக்கில், பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் குழுமத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல், இந்தத் தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்றும் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்பளித்து உள்ளது.

இதனால் வரும் கல்வி ஆண்டிலேயே (2011-2012) பொது நுழைவுதேர்வு நடத்த இந்திய மருத்துவக் குழுமம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு?

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லீம்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில் இட ஒதுக்கீடு மூலம் மட்டும் 70- க்கு மேற்பட்ட MBBS சீட் முஸ்லீம்களுக்கு தரபடுகின்றது. கடந்த வருடம் MBBS சேர்க்கையில் இடஒதுக்கீடு மற்றும் தகுதி (அதிக மதிப்பெண்) அடிப்படையில் மொத்தம் 129 முஸ்லீம் மாணவர்கள் MBBS-ல் சேர்ந்தனர். மருத்துவ படிப்பிற்க்கான பொது நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. மத்தியில் முஸ்லீம்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு கிடையாது. இதர பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு உள்ளது, இதர பிற்படுத்தபட்ட வகுப்பினர் பட்டியலில் முஸ்லீம்களும் வருகின்றனர்.

தனி இட ஒதுக்கீடு இல்லை என்றால் 70-ல் குறைந்தது 40 MBBS இடங்களை இழக்க நேரிடும். இந்த ஆண்டை போல் அடுந்த ஆண்டும் 129 முஸ்லீம் மாணவர்கள் MBBS சேர வேண்டும் என்றால் முஸ்லீம்கள் ரூ.10 கோடி கூடுதல் செலவு செய்ய வேண்டும். (ஒரு MBBS சீட் 25 லட்சம் என்று வைத்து கொண்டாலும் 10 கோடி ரூபாய் தமிழக முஸ்லீம் சமுதாயம் இழக்க நேரிடும் அல்லது இந்த 40 MBBS சீட்டை இழக்க நேரிடும்). நாம் கஷ்ட்டப்பட்டு போராடி பெற்ற தனி இட ஒதுக்கீடு இந்த மருத்துவ படிப்பில் வீணாக வாய்ப்புள்ளது.

அரசு என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசு பொது நுழைவு தேர்வை நிறுத்த வேண்டும் அல்லது தேர்வை மத்திய அரசு நடத்தி MBBS சேர்க்கையை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது பொது நுழைவு தேர்வை நடத்தும் உரிமையை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். மாநில அரசு சேர்கை நடத்தினால் நமக்கு 3.5% இட ஒதுக்கீடு கிடைக்கும். அல்லது மத்திய அரசு ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லீம்களுக்கு 10% தனி இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு இந்த பொது நுழைவு தேர்வை நடத்த வேண்டும். இதை தவிர எந்த முயற்சியை மத்திய அரசு எடுத்தாலும் முஸ்லீம்கள், மிகவும் பிறபடுத்தபட்ட வகுப்பினர்களுக்கு அது பெரும் பாதகமாக முடியும்.

இந்த செய்தி இட ஒதுக்கீடு தத்துவத்தை விளங்காத சம்சுதீன் காஸிமிகளுக்கு வேண்டுமால் நல்ல செய்தியாக இருக்கலாம். ஆனால் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சியின் மேல் அக்கரை உள்ள அனைவருக்கும் இது அபயாய செய்திதான்.

செய்தி – S.சித்தீக்.M.Tech