மருத்துவம் சார்ந்த படிப்புகள் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

nurseநர்சிங் உதவியாளர், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பதினைந்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் கிங் நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்படும் 2009-10ம் ஆண்டிற்கான நர்சிங் உதவியாளர்(ஆறு மாதங்கள்), மருத்துவம் சார்ந்த சான்றிதழ்(ஒரு ஆண்டு), பட்டயப் படிப்புகள்(இரண்டு, இரண்டரை ஆண்டுகள்) பயிற்சிகளுக்கு ஜூலை முதல் தேதியில் இருந்து 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி தேதி வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை படிக்க விரும்பும் கல்லூரி, மருத்துவமனைகளில் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு விநாயகம் கூறியுள்ளார்.

-TNTJ மாணவர் அணி