மத்திய கொழும்பு (மெத கொழம்ப) வைத்திய சாலைக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) உதவி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 26-9-2013 அன்று மத்திய கொழும்பு (மெத கொழம்ப) பொது வைத்திய சாலைக்கு மின்குமிழ்கள், படுக்கை உபகரணங்கள் மற்றும் அடையாள பலகைகள் என சுமார் 1.5 இலட்சம் பெருமதியான பொருட்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து “இஸ்லாம் கூறும் மனித நேயம்” என்ற தலைப்பில் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் : அப்துர் ராசிக் சிங்கள மொழியில் உரையாற்றினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய்மை வாழ்வைப் பற்றி எழுதப்பட்ட “யார் இந்த முஹம்மத் (ஸல்) அவர்கள்?” என்ற புத்தகம் வழங்கப்பட்டது.