மத்திய அரசின் முஸ்லிம்களுக்கான கல்வி உதவி திட்டம்

rupeesசென்ற ஆண்டைபோல் மத்திய அரசு இந்த ஆண்டும் சிறுபாண்மை (முஸ்லீம்கள் உட்பட) மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்க உள்ளது, , விணப்ப படிவத்தை இந்த இனையதளத்தில் http://minorityaffairs.gov.in/ -Download செய்து கொள்ளளாம்,

form1

form2

மேலதிக விளக்கத்திற்க்கு கீழ்காணும் அரசின் அறிவிப்பை பார்க்கவும்,

கவனிக்க வேண்டியவை :

1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி/கல்லூரிகள் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும், நேரடியாக அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

2. விண்ணப்பங்கள் அனுப்பிய அனைவருக்கும் உதவி தொகை கிடைக்காது, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்கும்.

பொதுவான தகவல் :

1. மத்திய அரசின் மூலம் வழங்கபடும் உதவி என்பதால், பல பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு, இந்த உதவி தொகை பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக சென்றிருக்காது, எனவே பல பள்ளிகளில்/கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டார்கள்.

2. ஊழல் அரசு நிறுவனங்களில் மலிந்து இருப்பதால், பொதுவாக இது போன்ற உதவி தொகைகள் உன்மையாக கஷ்ட்டப்படும் மாணவ/மாணவியருக்கு போய் சேராது.

3. மேலும் முஸ்லீம்களுக்கான உதவி தொகை என்பதால், இந்துத்துவா சிந்தனை உள்ள அதிகாரிகள் இந்த உதவி தொகை முஸ்லீம்களுக்கு சென்றுவிடாக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். சில நேரங்களில் இது போன்ற உதவி தொகைகளை அரசுக்கே திருப்பி அனுப்புவதும் உண்டு.
4. சென்ற வருடம் இந்த உதவி தொகை வழங்களில் ஏற்பட்ட குளருபடியை விசாரிக்க நமது மாணவரனி சகோதரர்கள் திருச்சி கலெக்டர் அலுவழகத்தை அனுகிய போது, ஒரு அதிகாரி தெரிவித்த தகவல் : இது போன்ற உதவி தொகைகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் கொள்ளை அடிக்கபடும், உண்மை முஸ்லீம்களுக்கு சென்றடைவதில்லை என்று வேதனை பட்டுகொண்டார்.

இதை கவனத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் மாணவ/மாணவிகளில்,
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்,
இந்த உதவி தொகை சம்மந்தமான உங்கள் புகார்களை ஆதாரத்தோடு இந்த முகவரிக்கு
ஆங்கிலத்தில் அனுப்புங்கள்

Ministry of Minority Affairs
11th Floor, Paravaran Bhawan
CGO Complex, Lodhi Road
New Delhi – 110 003

அரசின் அறிவிப்பு:

daily_thanthi


– எஸ்.சித்தீக் எம்.டெக்
TNTJ மாணவர் அணி