மதுரை மண்டல ஜனவரி 27 போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம்

கடந்த 21.12.2010 செவ்வாய்கிழமை காலை 11.30 மணியளவில் மதுரை (மஸ்ஜிதுந் நூர்) டிஎன்டிஜே மாவட்ட அலுவலகத்தில் மதுரை மண்டல ஜனவரி 27 போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இப்போராட்டக் குழுத் தலைவர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி, மாநில செயலாளர் ஹாஜா நூஹ், மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜனவரி 27 மதுரை உயர்நீதி மன்றத்தை நோக்கி நடைபெறும் மாபெரும் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இப்போராட்டம் அல்லாஹ்வின் பேருதவியால் வெற்றிகரமாக அமைவதற்கும் நாம் எதிர் பார்ப்பதை விட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பதற்கும் தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.