மண்ணடியை மையம் கொண்ட மக்கள் சுனாமி! – மோடிக்கு எதிராகத் திரண்ட மக்கள்!

மண்ணடியை மையம் கொண்ட மக்கள் சுனாமி!

– மோடிக்கு எதிராகத் திரண்ட மக்கள்!

13 copy 11 copy 9 copy 7 copy 6 copy 4 copy 3 copy

கடந்த 20.11.16 அன்று வடசென்னை மாவட்டம் மண்ணடியில் பாசிச பாஜக அரசின் மோடி கொண்டு வந்த கருப்புப்பண ஒழிப்பு நாடகத்தைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் கூட்டத்தால் மண்ணடியே திணறியது. ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமி மண்ணடியை மையம் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மக்கள் வெள்ளத்தால் மண்ணடி மிதந்தது.
நிகழ்வின் துவக்கமாக வடசென்னை மாவட்ட தலைவர் ஐ.அன்சாரி தலைமை தாங்கி பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார். பொதுக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் அவர்கள் மோடியின் கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சிகாலத்தில் நடந்த அவலங்களை பட்டியலிட்டார்.
பாசிச பயங்கரவாத பாஜகவின் ஆட்சியின் அவலட்சணங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு மோடியின் முகத்திரை இந்த உரையின் வாயிலாக கிழித்தெறியப்பட்டது.
அடுத்ததாக சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் கிறுக்குத்தனமான அறிவிப்பின் பின்னணியையும், இதன் பின்னால் நடந்த மறைமுக சூழ்ச்சிகளையும், இந்த அறிவிப்பினால் நாட்டு மக்கள் படும் இன்னல்களையும், அதனால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளையும், ஏற்படப்போகின்ற பாதிப்புகளையும் அடுக்கடுக்காக பட்டியலிட்டார். (பீஜே அவர்களின் உரை தனிக் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது.)
ஒட்டு மொத்த இந்திய மக்களின் உள்ளக்குமுறலாக இந்த உரை ஆக்ரோசமான முறையிலும், அதே நேரத்தில் சிந்திக்கக்கூடிய விதத்திலும் அமைந்தது.
இறுதியாக  பொதுக்கூட்டத் தீர்மானங்களை மாநிலச் செயலாளர் அப்துர்ரஹ்மான் வாசிக்க பொதுக்கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

பொதுக்கூட்டத் துளிகள்:

  • 20.11.16 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மூன்று நாட்களுக்கு முன்பாக கடந்த 17.11.16 அன்று வியாழக்கிழமைதான் செய்யப்பட்டது. மூன்றே நாட்களில் மாநாட்டுக்கு இணையான மக்கள் வெள்ளம் இந்த அளவிற்கு மண்ணடியில் குழுமியது மோடி ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த கோபத்தை கொந்தளிப்பதாக இருந்தது.
  • வந்திருந்த கூட்டத்தில் பெண்கள் சரிபாதி இருந்தனர்; பொதுவாக மற்ற மற்ற பெரிய கட்சிகள் பொதுக்கூட்டம் போட்டால் எவ்வளவு இடம் கொள்ளளவு நிறையுமோ அந்த அளவிலான இடத்தை மண்ணடியில் முஸ்லிம் பெண்களே நிறைத்தனர்.
  • முஸ்லிம் பெண்கள் எந்த அளவிற்கு மார்க்க விழிப்புணர்வு மட்டுமல்லாமல்; சமுதாய விழிப்புணர்வும் பெற்றுள்ளார்கள் என்பதை இந்தப் பொதுக்கூட்டம் பறை சாற்றுவதாக அமைந்தது.
  • மோடியின் அராஜக ஆட்சியின் காட்டுத் தர்பாரைக் கண்டித்து குழுமிய மக்கள் வெள்ளத்தால் மண்ணடியில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • மண்ணடியில் நடந்த இந்தப் பொதுக்கூட்டம் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதை தமிழகத்தின் பல பகுதிகளிலுமுள்ள தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ்களிலும், பொது இடங்களிலும் ப்ரொஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்தனர்.
  • குறிப்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் ஒளிபரப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பைக் காண மக்கள் பெரும் வெள்ளமாக திரண்டிருந்தனர். (புகைப்படம் காண்க)
  • பலசகோதரர்கள் ஃபேஸ் புக் வாயிகாவும் இந்த பொதுக்கூட்டத்தை நேரடி ஒளிபரப்புச் செய்தனர்.
  • சகோதரர் பீஜே அவர்கள் பேசி முடித்த 15 நிமிடங்களிலேயே பீஜே உரையாற்றிய ஒன்றரை மணி நேர வீடியோவும் முழுவதுமாக ஃபேஸ் புக்கிலும், வாட்ஸ் அப்பில் வாய்ஸ் ஆகவும், யூட்யூபில் முழு வீடியோவுமாக அப்லோடு செய்யப்பட்டு மக்களது செல்ஃபோன்களில் வலம் வந்தது.
  • சமூக வலைதளங்களையும், நவீன தொழில் நுட்பங்களையும் நமது சகோதரர்கள் எந்த அளவிற்கு பயனுள்ளதாகவும், சிறந்த தாவா களமாகவும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க ரீதியில் மட்டுமல்ல; சமுதாய ரீதியான விஷயத்திலும் மிகுந்த விழிப்புணர்வோடு செயல்படுவதோடு, மக்களையும் விழிப்புணர்வு பெறச் செய்யும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் என்பது இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக மீண்டும் ஒருமுறை நிரூபணமானது.