மங்களுர் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியத் தடை- கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

மங்களுர் கல்லூரில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியத் தடை- கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சி நடைபெறுவதால் பாசிச சக்திகள் பல வகைகளில் ஆட்டம் போட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மங்களுரில் உள்ள ஒரு கல்லூரி முஸ்லிம் மாணவிகள் ஃபர்தா அணிய தடைவிதித்துள்ளது.

மங்களூரில் ஸ்ரீ வெங்கட்ராமனா சுவாமி கல்லூரி என்ற ஒரு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை பந்த்வால் என்ற ஊரில் உள்ள எஸ்.வி.எஸ். வித்யவர்த்தகா சங்கம் நடத்தி வருகிறது. இது அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும்.

இந்த கல்லூரில் முதலாமாண்டு பி.காம் படிப்பவர் ஆயிஷா ஆஸ்மின். இந்த சகோதரரி ஃபர்தா அணிந்து முகத்தை மூடியபடி கல்லூரிக்கு வந்துள்ளார். இதையடுத்து இவரை அழைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் சீதாராம மய்யா, முகத்தை மூடியபடி வகுப்புகளுக்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளார். இந்த கல்லூரியில், சமீப காலமாக ஃபர்தா மற்றும் முகத்தை மூடியபடி வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இந்தத் தடையால் கடந்த பத்து நாட்களாக நான் வகுப்புகளுக்குப் போக முடியாவில்லை” என்று இந்த சகோதரி கூறியுள்ளார். மேலும், இந்த சகோதரி கூறுகையில், “ஜூலை 11ம் தேதி கல்லூரியில் சேருவதற்காக நேரடித் தேர்வுக்கு வந்தபோது கூட நான் ஃபர்தாவில்தான் வந்தேன். அப்போது யாரும் அதை ஆட்சேபிக்கவில்லை. இப்போது இப்படி தடை விதித்திருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது” என்றார்.

ஃபர்தா அணிய தடை விதிக்கப்பட்டதால், இந்த சகோதரி சுடிதார் அணிந்து, தனது தலையை ஸ்கார்ஃப் அணிந்து மறைத்து வந்துள்ளார். இதை பொறுக்க முடியாத பாசிச கல்லூரி நிர்வாகம், இதற்கும் தடைவிதித்துள்ளது. மேலும், இந்த சகோதரியின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கையும் செய்துள்ளது.

இந்த தடையால், இந்த சகோதரி கல்லூரிக்கு போக முடியாத நிலையில் உள்ளார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற தேர்வையும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கல்லூரி நிர்வாகம் தான் இப்படி பாசிச ஆட்டம் போடுகின்றது என்றால், இந்த சகோதரியுடன் பயிலும் சக மாணவிகள், “நீ ஸ்கார்ஃப் அணிந்து வந்தால், நாங்கள் காவி ஸ்கார்ஃப் அணிந்து வருவோம்” என்று தங்களின் காவி சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கல்லூரி முதல்வர் மய்யா, கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவின்படி தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

இதற்கிடையில், கல்லூரி மாணவ, மாணவியருக்கென உடைக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை என்று மங்களூர் பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தி, இந்த காவிகளின் வெறி செயலை வெளிப்படுத்தியுள்ளது.

பெண்களை போக பொருளாக மாற்றும் ஆறைகுறையான ஆடைகளை தடை செய்ய வக்கில்லாத இந்த கல்லூரி, பெண்களை கண்ணியமாக மதிக்க இஸ்லாம் வழங்கியுள்ள கண்ணியமான ஆடையான ஃபர்தாவை தடை செய்து தனது பாசிச வெறியை வெளிப்படுத்தியுள்ளது. அரசு உதவி பெறும் இந்த கல்லூரி பாசிச வெறியை முஸ்லிம்களிடம் காட்டுவதும், அரசு இதை வேடிக்கை பார்ப்பதும் வேடிக்கை உள்ளது.

இதற்கிடையில், மங்களூர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களையும் இந்த தடை சம்பந்தமாக விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்த கூட்டத்திற்கு பிறகு கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்காக ஆடைகள் சம்பந்தமான விதிகள் மாநில அரசிற்கு பரிந்துரை செய்ப்படுவதாக தெரிகிறது.

இதற்கிடையில், மெளலானா வகிதுத்தீன் கான் என்ற அரைவேட்காடு மார்க்க அறிஞர் (?), “ஃபர்தா அணிவது இஸ்லாத்தில் உள்ள விஷயம் இல்லை” என்று கூறி, தனது மார்க்க அறிவை நிருபித்துள்ளார். எறிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல், இந்த அரைவேட்காடு மார்க்க அறிஞரின் கருத்து உள்ளது. முஸ்லிம்கள் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத வரை இது போன்ற பிரச்சினைகளை எற்படுவதை தடுக்க முடியாது.

கல்லூரி நிர்வாகம் இந்த தடையை விளக்கவில்லையென்றால், எதிர்வரும் 28.08.2009 அன்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்த, TNTJ வின் அங்கமான கர்நாடக தவ்ஹீத் ஜமாத் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த அடாவடித்தனத்தை கண்டித்து பத்திரிக்கை அறிக்கையும் வெளியிட்டுள்ளது. கர்நாடக கவர்னரிடமும் இந்த தடை சம்பந்தமாக மனு கொடுக்க கர்நாடக தவ்ஹீத் ஜமாத் திட்டமிட்டுள்ளது.

பாசிச சிந்தனை கொண்ட இது போன்ற கல்லூரிகளை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என கர்நாடக தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறது.

செய்தி சேகரிப்பு: கர்நாடக தவ்ஹீத் ஜமாத் செய்தி குழு, பெங்களுர்.