மக்தப் மத்ரஸா நடத்தும் பெண் ஆசிரியைகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வளரும் தலைமுறையினர் சத்திய மார்க்கத்தை கற்கும் வகையிலான மக்தப் மத்ரசாக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களை கொண்டும் பெண்களுக்கு பெண் ஆசிரியைகளை கொண்டும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

மக்தப் மத்ரசாக்களில் பயிலும் சிறுமிகளுக்கு கூட ஆண்களை கொண்டு பாடம் நடத்தக்கூடாது என்பதை நமது ஜமாஅத் ஒரு விதியாகவே வகுத்து செயல்படுத்திக் கொண்டு இருப்பதும் தாங்கள் அறிந்த ஒன்றே.

இருப்பினும் சில கிளை, மாவட்ட மர்கஸ்களில் தத்தமது மத்ரசாவில் பயிலும் சிறுமிகளுக்கு பாடம் நடத்த பெண் ஆலிமாக்கள் கிடைப்பதில்லை. போதிய அளவில் பெண் தாயிக்கள் இல்லை என்று கூறிவருகின்றனர்.

இதற்காக ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களை கொண்டும் பெண்களுக்கு பெண் ஆசிரியைகளை கொண்டும் தான் பாடம் நடத்தப்பட வேண்டும் எனும் ஜமாஅத் விதியை நாம் தளர்த்தப் போவதில்லை என்றாலும் கிளை, மாவட்டங்கள் குறிப்பிடும் மேற்படி பிரச்சனையை சரிசெய்யும் நோக்கில் தலைமை ஒரு திட்டத்தை அறிவிக்கின்றது.

மக்தப் மதரசாக்களில் பயில வரும் மாணவிகளுக்கு திருக்குர் ஆனை கற்றுத்தருவதற்கு ஏற்ப பெண் பயிற்சியாளர்களை உருவாக்குவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரையில் நடத்திவரும் தவ்ஹீத் கல்லூரியில் வைத்து ஒரு வார காலத்திற்கு பெண்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பை தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் நடத்த உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில்,

குர்ஆன் ஓத கற்றுக் கொள்ள வரும் சிறுமிகளுக்கு எப்படி எளிமையாக குர்ஆனை கற்றுக் கொடுப்பது?

எழுத்து உச்சரிப்புகளை எப்படி திருத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் தகுந்த பெண் ஆலிமாக்களைக் கொண்டு இதில் வழங்கப்படும்.

குர்ஆன் ஓத தெரிந்த பெண்கள் மட்டுமே இப்பயிற்சியில் அனுமதிக்கப்படுவார்கள்.

பயிற்சி நாட்கள் : டிசம்பர் 25 சனிக்கிழமை முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை (7 நாட்கள் மட்டும்)

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் பெண்கள் மக்தப் மத்ரசா பாடம் நடத்த தகுதியுள்ளவர்களாக தயார் செய்து அனுப்ப படுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

ஆர்வமுள்ளவர்கள் கிளை மாவட்ட பரிந்துரையுடன் வரும் 04.12.17 திங்கட்கிழமைக்குள் விண்ணப்பிக்கவும்

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்