மகளீர் மசோதா: இது சர்வதேச சதி! நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களை விரட்டி அடிக்கவே பா.ஜ.க கூட்டு! முலாயம் சிங் குற்றச்சாட்டு.

மகளிர் மசோதா ஒரு சர்வதேச சதி என்று சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் முலாயம் சிங் யாதவ் நேற்று(15-3-2010) அளித்த பேட்டி:

நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மூலம் ஆண்களையும் குறிப்பாக முஸ்லிம்களையும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க திட்டமிட்ட முயற்சி நடக்கிறது. இது ஒரு சர்வதேச சதி.

இந்த சதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டே பங்கு கொண்டுள்ளது.

மகளிர் மசோதா விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜ.வும் ஒன்றாக கைகோர்த்துள்ளன. நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சதி செய்கின்றன. ஏற்கனவே, 1977, 1989 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசில் முஸ்லிம்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

கடந்த மக்களவை தேர்தலில், மத்தியப் பிரதேசம், அரியானா, டெல்லி உட்பட சில மாநிலங்களில் ஒரு முஸ்லிம்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. மகளிர் மசோதா அமலானால், முஸ்லிம்கள் நாடாளுமன்றத்துக்கே வர முடியாது என்றார்.

இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னால் இரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவும் இதே கருத்தை வழியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் அளித்த பேட்டியின் வீடியோ Click Here

இது தொடர்பாக ஆங்கில செய்தி Click Here

-தொகுப்பு அபு அஜீபா