மகராஷ்டிரா மாநிலம் புணே குண்டு வெடிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

மகராஷ்டிரா மாநிலம் புணே குண்டு வெடிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

Bakery-bomb-blast-in-Indi-001

கடந்த சனிக்கிழமை (13-02-2010) இரவு 7.30 மணிக்கு மகராஷ்டிர மாநிலம் புணே அருகே சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்திருக்கின்றன. பேக்கரி ஒன்றின் அருகில் வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் இதுவரை ஒன்பது பேர் பலியானதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சில வெளிநாட்டவர்களும் இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. வழக்கம்போல் இஸ்லாமிய அமைப்புகள் மீது பழி போடும் வேலையை சில ஊடகங்கள் செய்து வருகின்றன.

உண்மையிலேயே அத்தகைய அமைப்புகள் இச்செயலைச் செய்திருந்தால் அவை தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறான செய்திகளை பல ஊடகங்கள் செய்துவருவதை நாம் முந்தைய பல குண்டு வெடிப்புகளிலும் பார்த்து வந்திருக்கிறோம்.

பின்னர் உண்மை தெரியவரும்போது இந்த ஊடகங்கள் அதைக் கண்டு கொள்ளாததையும் நாம் பார்த்து வருகிறோம். எனவே இக்கொடுஞ்செயலை செய்த உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்களை தண்டிக்கும் வேலையை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

மேலும் இக்கொடிய செயலுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.