பொது மக்களுக்கு தெரிந்தது போஸ்டர் அடித்தவர்களுக்கு தெரியவில்லை!

திருவிடைச்சேரி சம்பவம் தொடர்பாக 19 இயக்கம் சேர்ந்து அடித்துள்ள போஸ்ட்டருக்கு பதில்!

Download in PDF

இந்திய முஸ்லீம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி கடந்த ஜுலை 4 ம் தேதி தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் மாபெரும் மக்கள் சக்தியைக் கூட்டி நமது கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்தோம்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து மாநாடு நடத்திய பின் இது தொடர்பாக பரிசீலனைகள் நடந்து கொண்டிருப்பது நன்மையாக இருந்தாலும் இந்த மாநாட்டுக்குப் பின் பல இயக்கங்களுடைய வயிற்றில் புலியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது.

இந்த மாநாட்டுக்குப் பின் எப்படி இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டினார்கள் என்று மற்ற இயக்கத்தவர் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது நாம் கூட்டவில்லை அல்லாஹ் கூட்டிய கூட்டம்.

நியாயமான ஒரு கோரிக்கையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்வைத்தது.அல்லாஹ்வின் உதவியும் நமக்குக் கிடைத்தது.

இது தனிப்பட்ட நபர்களுக்காக கூடிய கூட்டமோ அல்லது இயக்கத்திற்காக கூடிய கூட்டமோ அல்லது யாருடைய பெருமையை தம்பட்டம் அடிப்பதற்காகவோ கூடிய கூட்டம் கிடையாது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நல்ல எண்ணத்தில் செய்கிறார்கள் என்று அல்லாஹ்வே மக்களின் மனங்களை மாற்றி மக்களை இந்த மாநாட்டின் பக்கம் திருப்பி விட்டான் என்று எடுத்துக் கொள்ளாமல் எல்லா முஸ்லீம் இயக்கங்கள் மத்தியிலும் இது ஒரு அதிர்ச்சி அலையையே ஏற்படுத்திவிட்டது.

இந்த அளவு வீரியமாக வளர்ந்து விட்டார்களே !

இவ்வளவு கூட்டத்தை கூட்டிவிட்டார்களே என்ற காழ்ப்புனர்வு பல இயக்கத்தவர்களின் உள்ளங்களில் ஊடுறுவி விட்டது.

அதனுடைய விளைவு தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்கின்றன.

ஒன்று சேர்ந்து இப்போது ஆள் உயர போஸ்டர்களை ஒட்டுவதைப் பார்க்கிறோம்.

ஒட்டக் கூடிய போஸ்டர்களில் நியாயமான காரணங்கள் இருந்தால் அதனை ஒத்துக் கொள்ளலாம்.

ஆதில் சொல்லப் பட்டுள்ள காரணங்களைப் பார்க்கும் போது நம்மால் இது போன்ற கூட்டத்தை கூட்ட முடியாது.அத்தனை இயக்கங்கள் ஒன்று சேர்ந்து கூட்டினாலும் கூட்ட முடியாது என்ற தகவலை வெளிப்படுத்துகிறது.

இந்தப் போஸ்டர்களில் பேர் போட்டுள்ள அனைத்து இயக்கத்தவர்களும் சேர்ந்து ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தாலும் மக்கள் வரமாட்டார்கள் ஏன் என்றால் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் என்றோ இழந்துவிட்டார்கள்.மக்களுடைய மனங்களை வெள்ளும் வகையில் இவர்கள் நடக்கவில்லை.

அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள் இயக்கம் தொடர்பாக இவர்களுடைய செயல்பாடுகள் அவர்களின் நாணயம் ஒழுக்கம் நேர்மை எல்லாமே சந்தி சிரிக்கக் கூடிய ஒரு நிலையில் இருக்கும் காரணத்தினால் அவர்கள் தனியாக அழைத்தாலும் அல்லது அனைவரும் சேர்ந்து அழைத்தாலும் மக்கள் வருவதற்கு தயாராக இல்லை என்கிற காரணத்தினால் இப்போது அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக மக்களை திருப்ப முனைகிறார்கள்.

போஸ்டரில் எழுதப்பட்டது என்ன?

கடந்த ரமழான் மாதம் திருவிடைச் சேரி என்ற இடத்தில் தவ்ஹீத் சகோதரர்கள் அவர்களது இடத்தில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது அங்கு தொழ வந்த ஒருவருக்கு சில சுன்னத் ஜமாத்தை சார்ந்தவர்கள் அடிக்கிறார்கள்.

அடி வாங்கியவரின் உறவினர்கள்களில் ஒருவர் சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர் இதற்கு நியாயம் கேட்கச் செல்கிறார் அப்போது அவரிடம் துப்பாக்கியும் இருக்கிறது அவர் துப்பாக்கி லைசன்ஸ் உள்ளவர்.

அவர் திடீரென துப்பாக்கியால் சுடுகிறார் அந்த இடத்திலேயே 2 பேர் இறந்து விடுகிறார்கள் 4 பேர் படுகாயமடைகிறார்கள்.அந்த 4 பேரில் 3 பேர் முஸ்லீம் அல்லாதவர்கள்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு ஏதும் தொடர்பிருக்கிறதா ? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினையை உண்டாக்கினார்களா? நமது சகோதரர்கள் நமது ஜமாத்தினர் தொழும் இடத்தில் தொழுகிறார்கள் சுன்னத் ஜமாத்தை சேர்ந்வர்கள் அங்கு வந்து பிரச்சினையை உண்டு பண்ணுகிறார்கள்.

இந்த சம்பவத்தை தூண்டியதும் நாமில்லை அதில் துப்பாக்கி சூடு நடத்தியவர் நமது சகோதரரும் இல்லை.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அனுதாபியும் இல்லை அவருடைய மச்சானை அடித்துவிட்டார்கள் என்பதற்காக துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் இந்த போஸ்டர்களில் பெயர் போட்டுள்ள இந்த இயக்கங்கள் அனைத்தும் திருவிடைச் சேரிக்கே போய் விசாரிக்கிறார்கள்.

அந்த ஊர் மக்களோ இந்த சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை சம்பந்தப் பட்டவர் தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவரும் அல்ல என்று சொல்லி விட்டார்கள்.

இப்படி இவர்கள் எடுத்த ஆயுதங்கள் அனைத்தும் பொய்யாகிவிட்டதால் இப்போது உண்மைக்கு மாற்றமாக பொய்யாக திருவிடைச் சேரியில் துப்பாக்கிச் சூடு நடத்திய டி.என்.டி.ஜெ குண்டர்களை கைது செய் என்று போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பேசுகிறீர்கள் ஒரு ஜமாத்தை குற்றம் சாட்டுகிறார்கள் அப்படி சாட்டும் போது உண்மையை சொல்லி மக்களிடம் பறப்ப வேண்டுமே தவிர பொய்யை பரப்பக் கூடாது.

திருவிடைச் சேரி சம்பவத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது நாடறிந்த உண்மை.

இது ஒரு தனி நபரின் கோபத்தினால் ஏற்பட்ட நிகழ்வு இது போன்ற சம்பவங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஈடுபடாது என்பதெல்லாம் மக்களுக்கு மிகத் தெளிவான விஷயம்.

இப்படியிருக்க இந்தப் போஸ்டர்கள்  இவர்கள் அடித்தவுடன் போலிஸ் வந்து டி.என்.டி.ஜெ சகோதரர்களை கைது செய்துவிடவார்களா?

தவ்ஹீத் ஜமாத் செய்திருந்தால் கை வைக்க முடியுமே தவிர செய்யாத ஒரு செயலுக்காக கைது செய்யும் தைரியம் யாருக்காவது வருமா?

எந்த அரசாங்கமும் கை வைக்க முடியாது.

ஒன்றும் நடக்கப் போவதில்லை இந்த போஸ்டர் அடித்த செலவுக்கு வேறு ஒரு நல்ல காரியத்தை செய்திருக்களாம்.

இப்படி போஸ்டர் அடிப்பவர்கள் போஸ்டர் அடித்தவுடன் போலிஸ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை கைது செய்யப் போவதுமில்லை.அனைத்து இயக்கங்கள் மக்களை உசுப்பி விட்டு போராட்டம் நடத்தினாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை இறைவனின் அருளால் எதுவும்; செய்ய முடியாது.

ஏன் என்றால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

எந்த மக்களை இவர்கள் தூண்டிவிட நினைக்கிறார்களோ அந்த மக்கள் கொள்கையில் தவ்ஹீத்வாதிகளாக இல்லாவிட்டாலும் நம்பிக்கை நேர்மை ஒழுக்கத்தில் எல்லாம் தவ்ஹீத் ஜமாத் தான் முதன்மையானது என்பதை தெளிவாக விளங்கி வைத்துள்ளார்கள்.

அதனால் தான் நாம் அழைத்தவுடன் இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக பல லட்சக் கணக்கில் வந்தார்கள்.

அந்த மக்களை எல்லாம் பொய்களையும் கட்டுக் கதைகளையும் சொல்லி உசுப்பிவிட முடியாது பொய்க்கும் புரட்டுக்கும் மயங்கக் கூடிய மக்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் இப்போது யாரையும் ஏமாற்ற முடியாது.

எத்தனை இயக்கங்கள் ஒன்று சேர்ந்தாலும் சரி இறைவனின் கருணையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை ஒன்றும் செய்ய முடியாது.

மக்கள் நபியவர்களிடம் வந்து அனைத்து மனிதர்களும் உங்களுக்கெதிராக ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று சொன்ன நேரத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி இறைவன் இவ்வாறு விபரிக்கிறார்.

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (آل عمران : 173)

மக்கள் உங்களுக்கெதிராக திரண்டு விட்டனர் எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர்.இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது.எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் அவன் சிறந்த பொருப்பாளன் என்று அவர்கள் கூறினர்.(3:173)

ஆகவே இவர்கள் அத்தனை பேரும் 19 இயக்கம் அல்ல 19லட்சம் இயக்கம் ஒன்று சேர்ந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை ஒன்றும் செய்ய முடியாது.என்பதே நிதர்சனம்.

இப்படிப் பட்ட பொய் பிரச்சாரங்களினால் அவர்கள் மேலும் மேலும் அவமானப் பட்டு செல்வாக்கிழந்து மக்கள் மத்தியில் வெருப்பை சம்பாதித்தவர்களாக இறைவன் ஆக்குவான்.