கொலைக் குற்றாவளியை கண்டுபிடிக்காத காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்-பேர்ணாம்பட்!

பேரணாம்பட்டைச் சேர்ந்த சுஹேல் அஹ்மத் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு மூன்று மாதம் நெருங்கிவிட்டது கொலைக் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல் துறையை செயல்பாட்டைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளையில் நேற்றைய முன்தினம் (8-10-2010) மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் பயாஜ் அஹ்மத் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் கடலூர் அப்துர் ரஜாக் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்ததார்கள். மாநில துணைத் தலைவர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.