போத்தனூர் நூரபாத் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் நூரபாத் கிளையின் சார்பாக கடந்த 14-01-2011 வெள்ளிக்கிழமை அன்று பாரதி நகரில் பெண்களுக்கான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட பெண் பேச்சாளர்கள் இஸ்லாமிய உரை நிகழ்த்தினார்கள்.

ஆரம்பமாக சகோதரி. காதிரியா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் சகோதரி.ராபியா அவர்கள் ”இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகள்” என்ற தலைப்பிலும் சகோதரி.அஷி முஃபைகா அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

பெண்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.